Monday 17 July 2017

கிளாஸ் - 7 பாடம் - நியம - சந்தோச (சந்தோஷம்)

பாடம் - நியம - சந்தோச (சந்தோஷம்)

நேரடியான அர்த்தம் என்று சொன்னால் சந்தோஷம் தான். சந்தோசம் என்பது ஒரு உணர்ச்சி இந்த உணர்ச்சி எப்படி ஒழுக்கமாக முடியும். எப்படி என்று பார்ப்போம், ஒருவர் தான் நினைத்தது நடந்து விட்டால் சந்தோஷமடைகிறார். அனால் அதே சமயம்  நினைத்ததும் அப்படியே நடந்து விடுமா?, இங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த சந்தோசம்  ஒழுக்கம். ஒருவர் ஒரு முடிவு தனக்கு வேண்டும் என்று ஒரு கடமையை செய்கிறார் அவர் தன் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தந்து அந்த வேலையை செய்கிறார், இலக்கு நிர்ணயம் செய்துவிட்டார், உழைத்தும் விட்டார், அனால் அவர் எதிர்பார்த்த பயன் கிடைக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. ஏனெனில் ஒரு கல்லை ஒரு இலக்கை குறிவைத்து எறிகிறோம் அந்த கல் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் பல காரணிகள் தாண்டி தான் செல்லவேண்டும். எரிபவரின் வேகம், காற்று, கல்லின் கனம் இத்தியாதிகள். அதே போல் நாம் செய்யும் வேலைகளில் இலக்கை அடைய ஆயிரம் காரணிகள் தடுக்கும், அனால் ஏதேனும் ஒரு விளைவு (வேலைக்கான பலன்) நமக்கு கிடைக்கும். அந்த பலனை மகிழ்வுடன் ஏற்று கொள்வதே இந்த ஒழுக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதையே மனநிறைவுடன் என்று சொல்வார்கள். கிடைத்ததை சந்தோஷமாக ஏற்று கொள்ள மனதை நாம் பயிற்சி செய்து மனநிறைவுடன் இருப்பதே இந்த ஒழுக்கமாகும். இதனால் கோபம்,ஏக்கம், பொறாமை, பயம் எதுவும் நம்மை அண்டாது, இதுவே நிம்மதி தரும் சந்தோசமாகும்மன நிரைவை வெளி உலகத்தில் தேடாதீர்கள். உங்களுக்கு கொடுக்கபட்டதை, கிடைத்ததை, நீங்கள் கஷ்டபட்டு சம்பாதித்ததை என்ன கிடைத்ததோ அதை மன நிறைவுடன் ஏற்று கொள்ள மனதை பழக்க வேண்டும். இல்லாவிட்டால் அது முடவு இல்லாத ஏக்கத்திற்கே வழி வகை செய்யும். ஒரு கடமை செய்யப்பட்டது, அதற்கு பலன் நீங்கள் எதர்பார்தத்து இல்லை. முயற்சி விரயம் ஆகிவிட்டது, ஆனால் அந்த கடமையை முறையாகத்தான் செய்தீர்கள். அப்படி சந்தர்பத்திலும் உங்களுக்கு கிடைத்த பலன் சரி என்றும், அடுத்தது மீண்டும் முயற்சி செய்யலாம். அதை விடுத்து உங்களுக்கு வந்த பலனை குறை கூறலாகாது. உங்களுக்கு எது கிடைத்ததோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை அடையவேண்டும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் கொடுத்தால் கூட ஒரு மனிதனை திருப்தி படுத்த முடியாது அப்படி இருக்கையில் எப்படி வரும் இந்த போதும் என்ற வார்த்தை. நாம் நமது பயிற்சியின் வாயிலாக தான் நமது மனதின் ஆழத்தில் இருக்கும் போதும் என்ற மனதை வெளியே கொண்டுவரவேண்டும். இந்த பக்குவம் மனிதரை மாமனிதராக்கும். போதும் என்ற மனது இல்லாதவர்கள் எவ்வாறு அடுத்தவர்களுக்கு மனது உவந்து கொடுப்பார்கள், இந்த ஒழுக்கத்தின் மூலம் தான் பேராசையில் இருந்து விடுதலை கிடைக்கும்
லாக்கரில் இருக்கும் தங்க வைர நகைகள் உங்கள் மனதிலும் இருக்கும். அதிக விலை  உள்ள கார் காரேஜ் லும் இருக்கும் அதேசமயம் உங்கள் மனதிலும் இருக்கும். இது போல டஜன் கார்கள், வீடுகள் இன்ன பிற உங்களுக்கு பிடித்த அனைத்தும் உங்கள் மனதில் இருக்கும் போது இவைகள பற்றிய சிந்தனயே மேலோங்கி இருக்கும் பட்சத்தில் உங்களால் எப்படி மன நிறைவை பற்றி சிந்திக்க முடியும். கெளதம புத்தா சொல்வர், உங்கள் மனதை விட்டு தூக்கி எறியுங்கள், அப்போதுதான் உங்கள் மனதுக்கு மேலே உயர்ந்து பறக்க முடியும் அதன் பிறகு தான் மன நிறைவு கிடைக்கும்

இந்த ஒழுக்கத்தின் முக்கியமான அங்கம் என்னவென்றால் மனிதர்கள் கஷ்டப்படும் போது இந்த ஒழுக்கம் மிக உதவியாக இருக்கும், எப்போதும் கஷ்டமோ நஷ்டமோ தொடர்ந்து இருப்பதில்லை அனால் நமது மனம் அவ்வாறு எண்ணாது, தவிரவும் அந்த கஷ்டம் நம்கூடவே இருப்பது போல மாயை உருவாகும், அந்த சமயத்தில் இந்த மனநிறைவு, கிடைத்தது போதும், திருப்தி அடைவது மிகுந்த பயன் அளிக்கும். மேலும் கடந்த காலத்தின் மன கசப்பு இருக்காது, அதே போல் வருங்காலத்தை பற்றின மிகுந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போகும் என்று பல குருமார்கள் சொல்வதுண்டு, மன அமைதிக்கு ஏதுவாக, இந்த சந்தோஷம், நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கையை,வாழ்க்கை கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்ள, கிடைத்தது சிறந்தது, தேவைக்கு போதும் என்கிற மனநிறைவை நமே நமக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.  மஹா குரு திருமூலர்  சொல்லும்போது மனதை பழக்கி விட்டால் வாசி தேவை இல்லை என்றுஇது த்ரி கரணத்திலும் இருக்கவேண்டும் மனதில் வேறு நினைத்து பேச்சில் போதும் என்று சொல்ல கூடாது, முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால் தான் சரி. இல்லாவிட்டால் உங்கள் செயல் உங்கள் மனதை ப்ரதிபலித்துவிடும்
நிம்மதி, சந்தோஷம், இன்பம், அமைதி, சாந்தி போன்ற அனைத்துமே உங்களை தேடி வரும்.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya 


No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil