Wednesday 19 July 2017

நியம - ஸவாத்யேய ( சுய ஆய்வு) வகுப்பு - 9



வகுப்பு - 9
நியம - ஸவாத்யேய ( சுய ஆய்வு)

நாம் ஏற்கெனவே 8 விதமான ஒழுக்கங்களை பயின்று விட்டோம் ( எவ்வளவு ஆழமாக உணர்ந்தீர்கள் என்பது தெரியாது). ஆழ்மனதில் அழுத்தமாக பதியவேண்டும்.இதே ஒழுக்கங்கள்,  கேட்பது மற்றும் பார்ப்பதன் மூலமாக அதை நமது சொந்த வாழ்க்கையில் உபயோகிக்கவும் பயிற்சி எடுக்க வேண்டும். புனித புத்தகங்களை படிப்பது, பெரிய மஹா குருக்கள் சொல்லுவதை கேட்பது, மற்றும் குரு மார்களின் காணொளிகளை காண்பது இவைகளை திரும்ப திரும்ப செய்யவேண்டும், வாழ்க்கை முழுவதும். இவ்வொழுக்கங்களை உங்கள் வாழ்வில் நேரிடையாக உபயோகிக்கும் பொது தான் உங்களுக்கு பல விதமான கேள்விகள் வரும் அப்போது தான் உங்களுக்கு ஒரு குரு தேவை படுவார். உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் கண்டுபிடிக்க ஆரம்பிக்கும் வரை உங்களுக்கு இந்த ஸ்வாத்யேய தேவை.

ஏன் இந்த ஒழுக்கம் படிப்புக்கு ஒரு படிப்பா? யாரேனும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பார்க்கும் அனைத்திலும் மஞ்சள் நிறம் தெரியும். அதை பீத சங்கஹ என்பார்கள், மஞ்சள் காமாலை வந்தவருக்கு வெண்ணிற சங்கும் மஞ்சளாக தெரியும் என்பது.  அதே போல சாதாரண மனிதன், தேடுபவராக மாறினால் அவர் எல்லாவற்றிலும் யோகத்தை காண்பர். இங்கே யோக ஏதை குறிக்கும் என்றால் கர்தவ்யம் என்னும் ஒழுக்கத்தை குறிக்கும், அவர் எல்லாவற்றிலும் ஒரு அமைதியை உணர்வர். அனைத்தும் கச்சிதமாக செய்வார் அல்லது எதிர்பார்ப்பார்.
யோகா என்ற மந்திர சொல், ஒரு வாரத்தில் கற்று முடிந்த அடுத்த பத்து நாட்களில் ஏதோ அஷ்டமா சித்திகள் கிடைத்து விடும், நாம் பெரிய யோகியாகவோ அல்லது தபஸ்வி யாகவோ ஆகிவிடுவோம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. பெரிய குரு மார்கள் எல்லாம், பரம வைராக்கியம், வாசிக்கார வைராக்கியம் போல் எல்லாம் சாதனைகள் செய்து பல வருடங்கள் செய்தார்கள் பயிற்சி, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றால், நாம் இன்னும் உள்ள நுழைய வில்லை, உல் நுழைந்த பிறகு பயிற்சி எடுக்க வராது, நேரமிருக்காது, உடனே உடனே என்று நமக்கு எல்லாம் வராது மனம், சாதனை, இவைகளின் வேகத்திற்கு உடம்பு ஒத்துழைகாது, அப்போதெல்லாம், மனது சோர்ந்து விடும் அப்போது இந்த ஸ்வாத்யாய தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் புத்துணர்வு தந்து மீண்டும் உங்களை யோகத்திற்கு மீட்டு வரும்.
ஸ்வாத்யாய சரியாக சேமித்து வைத்து இருந்தால் தான், நாம் குரு கற்றுத்தருவதை உணர ஏதுவாகும். குரு ஒன்றை சொல்லிக்கொடுத்தால் அவற்றை நன்றாக ஆழ்ந்து சிந்தித்து, அதோடு நிற்காமல் இன்னும் ஆழமாக பாகுபடுத்தி பார்த்து, அதன் மூலம் தான், பாடத்தின் சந்தேகங்களை, முதலில் நமக்குள் நாமே கேள்வி யை  திரும்ப திரும்ப கேட்டு, நம்மால் விடைகளை காண முடியும், எப்போதென்றால் ஸ்வதேய நம்மிடம் சரியாக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்சத்தில், அந்த கேள்விகளுக்கான பதில் உங்கள் பகுத்தறிவுக்கும் மற்றும் தர்க்க ரீதியாக விடை உங்களால் காணமுடியும். பிறகு நீங்கள் உணர்ந்த விடை சரிதானா என்று உங்கள் குருவிடமும் கேட்டு உறுதி செய்து கொள்ளவேண்டும்
இந்த ஒழுக்கம் என்ன சொல்கிறது என்றால், உங்கள் பாடத்தின் படி உங்களால் எவ்வளவு அறிவை சேமிக்க முடியுமோ, ஒரு புத்தகமோ, ஒரு குருவோ என்றில்லாமல், வேறு வேறு வழிகளில் தேடுபவர் சேர்த்து அவைகளை எல்லாம் சேமித்து வைப்பது தான் சரி என்கிறது என்கிறது. நீங்கள் உங்கள் சாதனையை, பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன், இந்த ஒழுக்கங்கள் தெரிந்து கொள்ளுதல் மற்றும் பின்பற்றுதல் மூலம் தான், உங்களை நீங்கள் தயார் செய்கிறீர்கள். நீங்கள் திரும்ப திரும்ப படித்தல் கேட்டல் மூலம் வேறு வேறு பரிணாமங்களில் பார்க்க வழி வகை செய்யும். முந்தின முறை படித்ததை விட அடுத்த முறை படிக்கும் போது புதிய கோணம் கிடைக்கும்

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/


 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya  


No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil