Thursday 13 July 2017

Aparigrah Tamil Day – 5


Aparigrah Tamil Day – 5

இன்றய ஓழுக்கத்தின் தலைப்பு "அபரிக்ரஹ", பரிக்ரஹ என்றால் அபகரித்தல், தேவைக்கு அதிகமாக எடுத்தல் என்பதுதான். அவ்வாறு இருக்க கூடாது. இந்த ஒழுக்கம் மிக முக்கியமாக இருப்பது என்னவென்றால், அளவுக்குஅதிகமான அளவு கட்டுப்பாடு வேண்டும். ஒருவருக்கு இரண்டு உடுப்புபோதும் என்றால் ஒன்று கூட இருக்கலாம் அதற்காக 10-15 உடுப்புகள் வைத்து கொள்வது சரி அல்ல. உங்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக இருக்கலாம் அதற்கு உங்கள் மனதை கட்டுபடுத்தாவிட்டால் அந்த தேவையின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மனதிற்கு எப்போதும் அடிமையாகவே இருக்க நேரிடும். அதேசமயம் உங்களால் 3 இட்லி உண்ண முடியும் என்றால் சரி 5 இட்லி சாப்பிடலாம் ஆனால் 20 இட்லி எடுத்து வைத்துக்கொண்டு, அடுத்த வேளைக்கும் அடுத்த நாள் காலைக்கும் எடுத்து வைப்பதற்கு பதில், ஒன்று எடுக்காமல் இருப்பது அல்லது வேறு யாருக்காவது தருவது மனதையும் உடம்பயும் ஆரோக்யமாக இருக்கும்

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"மனது என்றுமே போதும் என்று சொல்லாதுஅதை நீங்கள் கடிவாளத்தை பிடித்து நிறுத்தினால் ஒழய மனம் உங்களை அலைகழித்து கொண்டே இருக்கும்வேண்டாம் என்பது பிடிக்காதததாலும்வெருப்பினாலும் சொல்வது ஆனால்போதும் அதுவும் பிடித்த பொருள்பிடித்த உணவு போன்றவைகளுக்கு போதும் என்ற வார்ததையேவராது.  அளவுக்கு அதிகமாக நுகர்வதும் ஒரு வகை திருட்டு தான்தனக்கு தேவை இல்லாவிட்டாலும் பரவாயில்லை எடுத்து வைத்துக்கொள்வோம்சேமித்து வைத்துக்கொள்வோம் என்பது இந்த ஒழுக்கத்தை மீருவதாகும்நமது உடம்பை அழுகு படுத்தி கொள்வது நல்லது ஆனால் அதற்கு செல்லம் கொஞ்ச கூடாதுநமது உடம்பு சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் மேலும் சிரிதளவாவது வலியை தாங்கும் சந்தர்பத்தை தர வேண்டும்வலி வந்த வுடனே மாத்திரை சாப்பிட கூடாது
மொத்த பூமியின் மீது ஒன்றரை கெஜம் உயரத்துக்கு பொன்னை நிரப்பி ஒரு மனிதனுக்கு கொடுத்தாலும் போதும் என்ற திருப்தி ஒரு மனிதனுக்கும் வராது, எங்கே முடியும் உன் ஆசைகள் என்று ஒருவரிடம் கேட்டால் அவர் கூறும் பட்டியலுக்குள் வாழ்வு முடிந்துவிடும். முழுதுமாக திருப்தி என்பது நமது மனதில் தான் உள்ளதே தவிர வெளியிலே சென்று தேட முடியாது. அது முடிவில்லா பயணம் ஆகும். அஹிம்சை, சத்யம், அஸ்தேய, ப்ரஹ்மசர்ய அனைத்தையும் இந்த ஒரு ஒழுக்கம் உள்ளடக்கியது. வாழ்வில் திருப்தி ஒன்று ஏற்பட மனிதன் எந்த அளவுக்கும் போவான். தன்னிறைவு அடைய மாட்டான், அதன் பொருட்டு தான் அத்துணை துன்பங்களையும் அடுத்தவர்களுக்கு தருவான், பொய் பேசி, வாக்கு தவறுவான், திருடுவான், உணர்ச்சிகளின் உச்சத்தில் ஏதையும் செய்ய துணிவான், மனிதம் அற்று போய் மிக கொடுமையானவனாக இந்த உலகத்துக்கு தெரிவான். அனைத்து ஒழுக்கங்களும் காரணமான ஆதாரமாக உள்ள இந்த ஒழுக்கம் கண்டிப்பாக மிக கண்டிப்புடன் கடைபிடிக்க பட வேண்டும்.

மேலும் சில முக்கியமான பார்க்கவேண்டியது பரிக்ராஹ பற்றியது (அபரிக்ராஹ தின் எதிர்பதம்) உடைமையாக்குதல், கட்டாயத்தால் சொந்தமாக்குதல் போன்றவைகள் பொறாமைக்கு வழி வகுக்கும். அதற்குமேல் பேராசை நம்மிடம் உள்ள அணைத்து நல்லவைகளை அழித்துவிடும். இவை இரண்டும் அம்மனிதனை கடுமையான பயத்தை உண்டாக்கும். மேலும் மேலும் அதிக அளவு பயம் ஏற்படும் போது அம்மனிதன் தான் நிலை இழந்து புத்தி பேதலிக்கிறான். சுய கட்டுப்பாடு முற்றும் அற்று போகிறது. பொதுவாக இந்த உடைமையாக்குதலினால் வரும் பயத்தினால் மனிதர்கள் தாழ்வுமனப்பான்மையால் அனைத்தையும் கண்டு பயப்படுபவர்கள் ஆகிவிடுவார் (சர்வம் வாஸ்து பயம்). இது மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருப்பதால் பல நேரங்களில் மனிதர்கள் ப்ரஹ்மச்சாரியத்தை மீறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் இந்த உடைமையாக்குதல், பொறாமை க்கு வழி வகுக்கும், பொறாமை மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கும், எதிர்பார்ப்பு தவறும் போது மனிதர்கள் தோல்வி அதனால் ஏமாற்றம், இவை அனைத்தையும் தாண்டி அவர் தன தன்னம்பிக்கையை இழப்பர், கடைசியில் அவர் மனசோர்வு தான்  மிஞ்சும். இவை திரும்ப திரும்ப ரயில் பெட்டிகள் போல் தொரடர்ந்து வரும் மன அழுத்தம் உடல்சோர்வு கொண்டு வந்து விட்டு விடும்.
பொறாமையய் பார்த்தோமேயானால், இது உள்ளே வந்தால் நம் அனைவரும் நன்கு அறிந்ததே அனைத்தையும் நாசம் செய்து மனிதரை துயரத்தில் மூழ்கடிக்கும். அந்த சமயத்தில் உங்கள் அகங்காரம் உங்களிடம் பொறாமை  அல்லது வந்துவிட்டது என்பதை கூட ஒத்துக்கொள்ளவிடாது. உங்களை ஒரு நிமிடமெனும் சிந்திக்க விடாது, மேலோட்டமாக என்ன நடக்கிறது என்பதை கூட பார்க்கவிடாமல் அனைத்தும் முடிந்து விடும். என்ன நடந்தது என்று அறியும் முன்னரே எல்லாம் முடிந்துவிடும். 
அதனால் இந்த பரிக்ராஹத்தின் விளைவு: உடைமையாக்குதல், பொறாமை, பயம், எதிர்பார்ப்பு, மனசோர்வு, ஏமாற்றம் கடைசியாக தன்னம்பிக்கை இழத்தல். பேராசை நமக்கு எல்லா துன்பங்களையும் துயரங்களையும் ஒன்று சேர கொண்டுவந்து தரும். அபரிக்ராஹ பயிற்சி எடுப்பதன் மூலமாக இவை அனைத்திலிருந்தும் ஒரே நேரத்தில் விடுதலை கிடைக்கும்.

நீங்கள் ஒரு வீடு காட்டுவதாக இருந்தால் குறைந்தது ஒரு சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை மற்றும் சிறு வராண்டா இவைகள் மட்டுமே போதுமானது, இதற்க்கு மேல் நீங்கள் இடங்களை சேர்த்துக்கொண்டே போவது தான் பரிக்ராஹ். அதற்காக படுக்கை அறையை விளையாட்டு மைதானம் போல் வைப்பது தவறு. வாழ்க்கைக்கான சேமிப்பு மிக மிக அவசியம், அதுவும் ஒரு அளவுக்கு மட்டுமே. மேலும் மேலும் அதிகமாக அளவுக்கு அதிகமாக சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் துன்பத்தையும் சேர்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதை போல் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சிக்காக கட்டப்படும் வீடுகளில் அவர்களின் தனி தனி புலன்களுக்கான சந்தோஷம், மகிழ்ச்சி காக மட்டுமே, "போக சாதன சுவீகாரஹ" இந்த போகத்திற்கான சாதனங்கள் கூடிக்கொண்டே போகும். இதை தன நமது ஆச்சார்யர்கள் சமூகத்தின் சாபம் என்று சொல்வார்கள், குணங்களின் தரக்குறைவு என்றும் சொல்வார்கள்
தேடுபவர் அவர் வாழ்க்கையை ஒழுழுக்கத்துடன், கண்ணியமான எளிய வழக்கை வாழ பழக வேண்டும், இது தான் உலகத்திலேயே சிறந்த வாழ்க்கை. அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி. ஈத் ஈகை பெருவிழா வின் அர்த்தமே இது தான் "கொடுப்பதற்க்கே இந்த வாழ்க்கை" அறிவு, அன்பு முடிந்தால் செல்வம். எதுவெல்லாம் உங்களிடம் சேர்ந்து உள்ளதோ அவைகளின் ஒரு சிறிய பகுதியை தேவையவர்களுக்கு கொடுத்தாலே இந்த அபரிக்ராஹ ஆகும். சேர்த்து வைத்தால் பாதுகாப்பானது அல்ல, தானம் செய்வதே ஒரே சிறந்த வழி

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya 


No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil