Tuesday 11 July 2017

Astheya Tamil Day – 3


Astheya Day – 3
இன்றய ஒழுக்கத்தின் தலைப்பு "அஸ்தேய" திருடாமை.
உடனே நீங்கள் எண்ணுவீர்கள் நான் என்று திருடினேன், உண்மையில் சொன்னால் இதனால் தான் அணைத்து தவறான வழிகளும் உருவாகுகின்றன. திருடாமை என்பது நீங்கள் ஒரு வீட்டிலோ அல்லது வெளியிலோ, அதன் சொந்தக்காரருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு வருவது மட்டும் என்று நினைக்க கூடாது. ஏன் ஒருவன் மற்றவர் பொருளை திருடவேண்டும். புத்தர் கூறியது போல ஆசையே அனைத்து  துன்பங்களுக்கும் காரணம். ஒரு மனிதனின் ஆசை அவர் தகுதிக்கு மீறியதாக இருப்பின், அவர் அதனை தனது உழைப்பின் மூலமே சம்பாதிக்க வேண்டும். அதை விடுத்தது வேறு வழிகளில் முயன்று அவருக்கு தெரியாமல் பொருளை கையகப்படுத்துவது தான் திருடுதல். இதன் விளைவாக, அவர் உண்மை என்னும் சத்தியத்தை மீறுகிறார், பறிகொடுத்தவரின் தவிப்பு காரணமாகி அஹிம்சை மீறப்படுகிறது. திருடுதல் மேலும். இவ்வாறாக அவர் எல்லா ஒழுக்கங்களையும் மீறுபவர் ஆகிறார்.
இப்போது நான் நேரடியாக பொய் ஒரு பொருளை கவர்ந்து வருவது தன திருடுதல் என்பதில்லை. எடுத்துக்காட்டாக மேசையின் மேல் ஒரு அறிய பொருளை பார்த்து அது எனக்கு வேண்டும்,  இருந்தால் எப்படி இருக்கும், அழகான கார் இருக்கிறது அதை பார்க்கின்ரீர்கள், மிக அற்புதமாக வடிவமைக்க பட்ட கார். இந்த கார் என்னுடையதாக இருந்தல் எப்படி இருக்கும் என்று நினைத்தவுடன் அதை நீங்கள் திருடி விடுகிறீர்கள் என்று தன அர்த்தம். லட்சம் ரூபாய்கள் மேசைமேல் இருந்தாலும் ஒரு தாள் எடுக்கலாம் என்று நினைத்தவுடன் திருட்டு நடந்து விடுகிறது, அனால் அதே சமயம் அதன் மீது உங்கள் எண்ணம் செல்லவில்லை என்றாலோ உங்கள் மனதில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால் தான் நீங்கள் சரியாக இருக்கின்ரீர்கள் என்று அர்த்தம்.
 த்ரி கரண படி எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். செயலால் நான் திருடவில்லை என்று சமாதான படுத்தி கொள்வது தவறு
பார்ட்டி கு செல்கிறீர்கள் உங்களுக்கு பிடித்தமான ஓர் தின்பண்டம் உள்ளது எதிரே. பார்க்கிறீர்கள் அனால் உங்களுக்கோ சுகர், நாக்கில் எச்சில் ஊறுகிறது, 4 எடுத்து சாப்பிடவேண்டும் என்று நினைத்தவுடன் சாப்பிட்டதாகிவிடுகிறது. நீங்கள் தின்று போக மீதி  தான் அங்கே அந்த தின் பண்டத்தின் வடிவில் இருக்குமே தவிர. அவைகளை நீங்கள் தின்றாகி விட்டது என்பது தன பொருள்

சாதாரண திருட்டுகளில் இருந்து மேலும் சிலவகையான திருட்டுகள் உண்டு, அவைகளையும் அறிந்து கொண்டு அவைகள் ஆழமாக சிந்தித்து நமது வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்தவர்களின் நேரத்தையோ, முயற்சியையோ திருடுதல் 
அதிகஅளவு நுகருத்தல், தேவைக்கு அதிகமாக அடுத்தவருக்கு கிடைக்க கூடாது என்பதற்காக.
நமது அலுவலகம் தானே என்று ஒரு சிறு குண்டு ஊசியை எடுத்தாலும் அதுவும் இதில் அடங்கும்.

இது இரண்டு காரணங்களால் நடக்கிறது,
1) தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு அது கிடைக்காததால் வரும் ஏக்கத்தின் பலன்.
2) இதை ஒரு பொருட்டாக எடுக்காமல் பழகியதற்காக செய்வது.

இதில் இருந்து வெளி வருவதற்கான வழி ஒன்று மட்டும் தான் உள்ளது. போதும் என்ற மருந்து. மேலும் வேண்டும் தேவை படுவதும் வேண்டும் தேவை படவில்லை என்றாலும் அதுவும் வேண்டும் என்ற மனதும், அனைத்து, புலன்களுக்கும் அடிமையாகி அவர்களுக்காக படும் கஷ்டம் தான் இது. இது ஒன்றை செய்தலே இதற்க்கு முன் பார்த்த சத்தியமும் அஹிம்சையும் உங்களிடம் இருந்து போய்விடும் உங்கள் அமைதியும், நிம்மதியையும் சேர்த்து கொண்டு போய்விடும்

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya 


No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil