Wednesday 26 July 2017

Eashwar in Yoga - Tamil


Eashwar in Yoga - Tamil
நாம் கடைசி ஒழுக்கத்திற்கு பார்க்கும் முன் ஒரு மிக முக்கியமான தலைப்பிற்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பெயர் "ஈஸ்வர்". இந்த பெயர் இவ்வுலகிலுள்ள அத்துணை மதங்களிலும் பிரசித்திபெற்ற பெயர் ஆகும். அதே போல் அனைத்து மதத்திலும் ஈஸ்வரன் என்பவர் தான் சிருஷ்டி, ஸ்திதி லயம் என்கிற படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இந்த மூன்றுக்கும் காரணமானவர் என்றும், அவர் தான் இந்த மொத்த ஆண்ட சராசரத்திற்கும் உரிமையாளர், காப்பாளர், வழிநடத்துபவர் இத்தியாதி எல்லாம். அனைத்திலும் உண்மை என்ற அடிப்படையாக இருப்பவர். இதை தவிர அதிக ஆழம் செல்ல தேவை இல்லை. வேத காலத்தில் ஈஸ்வர் என்பவருக்கான விளக்கம் உண்டு, அதாவது இந்த ஆண்ட சராசரத்திலுள்ள அனைத்து அசைவுகள் ( அணுவிலுள்ளும் ப்ரோட்ரோன், நியூட்ரோன், எலக்ட்ரான் ஆகிவை உள்ளன) அசைவதற்கு காரணமாக இருப்பது ப்ரஹ்மன் (ஹிரண்ய கர்ப), அவர் பெயர் ஈஸ்வரன் அவரே வாசுதேவர்.  அவர் மிகச்சிறிய வற்றை விட சிறிதாகவும், மிக மிக பெரியன வற்றை விட பெரிதானவைகளிலும் பரவி இருப்பவர். இதன் பிறகு தான் புறநா காலம், அந்த புராண காலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன அவை நமது பாடத்தில் இல்லை.
பகுத்தறிவாளர்களின் நிலைப்பாடு ஈஸ்வர் பற்றியது என்னவென்றால், நம்மவர்கள் தங்கள் பிரச்சனையில் இருந்து நழுவ உபயோகிக்கும் பெயர் தான் என்பார்கள்பல விதமான சமய வழிகளில் வந்தவர்கள் ஈஸ்வர் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள் என்று பார்ப்போம்.
முக்கியமாக  ஈஸ்வர் அதாவது பரமாத்மா, மனிதர் ஜீவாத்மா, கடைசி உலகம். இதில் மனிதர்கள் நாம் ஐம்புலங்களில் உணர்கிறோம், உலகத்தை நாம் ஐம்புலன்களால் உணர்கிறோம், இந்த பரமாத்மா ஐம்புலகளால் உணர முடியாது என்பதை கூறுகின்றன. சில சமய பெரியார்களின் நிலைபாடுகளை காண்போம்.

பௌத்த, ஜைன தரிசனம் - ஈஸ்வர் - இல்லை, மனிதர் - உண்டு, உலகம் - உண்டு
அத்வைதம் - ஈஸ்வர் - உண்டு,  மனிதர் - உண்டு, உலகம் - உண்டு (மனிதரும் ஈஸ்வர் இரண்டும் இரண்டும் ஒன்று)
த்வைதம், விசிஷ்டாத்வைதம் - ஈஸ்வர் - உண்டு, மனிதர் - உண்டு, உலகம் - உண்டு (மனிதர் வேறு, ஈஸ்வர் வேறு)
சார்வாக தரிசனம் - ஈஸ்வர் - இல்லை, மனிதர் - உண்டு, உலகம் - உண்டு (வாழ்க்கையை வாழ்)
இன்னும் இதை போல் 16-17 விதமான நிலை பாடுகள் உள்ளன. இவை எல்லாம் பின்னால் தேவைப்படும் தற்போது தெரிந்து கொள்வதற்காக. நாம் ஏன் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும், இதனால் நமது பாடத்தில் என்ன அவசியம். இருக்கிறது. வெறுமனே வெள்ளை சுவற்றை மனதில் நிறுத்தி த்யானம் செய்ய முடியாது. அதற்க்கு ஒரு இலக்கு நாமே நிர்ணயிக்க வேண்டும். மேலும் வரும்போது புரியும்.

நமக்கு ஏன் இந்த ஈஸ்வர் என்று ஒன்று வேண்டுமென்றால் நாம் நமது யோக, தியானத்திற்கு ஒரு முடிவு இலக்கு ஒன்று வேண்டும் அதன் பொருட்டு நமக்கு நாமே ஒரு ஈஸ்வரரை தயார் செய்ய வேண்டும். அப்படி ஸ்ரனயோகத்திற்கு யார் ஈஸ்வர்?
""மிக மிக மரியாதை தர தக்க, அன்பும் நட்பும் கொள்ள"" கூடிய ஒரு உங்களுக்கு பிடித்த பரிச்சியமான ஏதோ ஒன்று, அது ஏதுவாகவும் இருக்கலாம், கல், உங்கள் பெற்றோர், மூதாதையர்கள், ஒரு பூவாக கூட இருக்கலாம்மஹாத்மா பதஞ்சலி யின் 3 வது சூத்திரம் "ததா திருஷ்டு ஸ்வரூபே அவஸ்தானம்" அந்த ரூபத்தை பல சாதனைகள்,பின் மிக முக்கியமான நிலைகளில் காண்பீர்கள், இந்த ஈஸ்வர் மற்றும் உங்களை. அந்த ஸ்வரூபத்திற்கு ஒரு ரூபம் வேண்டும் அதற்க்கு தான் இந்த ஈஸ்வர். இப்போது நாம் நமது கடைசி ஒழுக்கத்திற்கு செல்வோம் "ஈஸ்வர ப்ரணிதான்அர்ப்பணிப்பு நமது கடமைகள் மற்றும் அதன் பலன்கள்


யோகா பாதையே முழுவதும் ஒழுக்கத்தின் பாதையாகும், இதற்கு ஒரு மனித உடலும் மனமும் தன வேண்டும், வேறு எதுவும் தேவை இல்லை, அந்த மனமும் உடலும் ஒழுக்கத்தினால் நிரம்பி இருக்க வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் யோகம் மனித குலத்துக்கே உரியது. நீங்கள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் உங்களுக்கு பிடித்த கடவுளை ஈஸ்வர் ஆகா ஏற்று கொள்ளுங்கள். நீங்கள் நாஸ்திகராக இருந்தால் உங்கள் ஈஸ்வர் நீங்களே உங்களுக்கு பிடித்த ஒன்றை உருவாக்கலாம். நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா, இல்லாதவரா என்பது பிரச்சனை இல்லை, யோகா உணர்தலும், எல்லைகளுக்கு அப்பால் செல்லுதல் தான் முக்கியம். நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் அனைவருக்குமே ஒழுக்கம் பொதுவானது தான். இவைகளை பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஒழுக்க சீலர் ஆவீர்கள். நீங்கள் ஒழுக்கசீலர் என்றால் நீங்களும் ஒரு யோகி தான். நீங்கள் மதம், ஆனிமீக வாதி என்றாலும் இல்லை என்றாலும் யோகம் இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது, அனால் யோகத்தை தான் அத்தனை, மதங்களும் வேறு விதமாக சொல்கின்றன. ஒரு நாத்திகர் யோக வழியில் பயணித்து எல்லா உணர்தல் நிலைகளையும் அடைய முடியும். அவர்கள் அவர்களே அவர் நாத்திக கொள்கைகளையே ஈஸ்வர் ஆக ஏற்று கொள்ளலாம்


Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/


 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya  

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil