Friday 14 July 2017

Understanding Yoga Tamil

Understanding Yoga Tamil

நம்மிடம் இன்னும் புரிதல் வேண்டும். இந்த வகுப்பு மாய மந்திரம், கால நேரம், ஜோசியம், அதிசயங்கள் செய்வது, ஆன்மீகம் மதம், சொற்பொழிவு, தத்துவங்கள், சம்பந்தமில்லாத கதைகள், பொழுது போக்கு போன்ற எதுவும் இங்கே வேண்டாம். 
நான் விழித்துக்கொண்டேன் இயற்கை எனக்கு விழித்துக்கொள்ள ஓர் சந்தர்ப்பம் தந்தது, நீங்கள் தூங்குகிறீர்கள், எனக்கு வந்த விழிப்பு உங்களிடமும் காண ஆசைப்பட்டது தான் இந்த குரூப். 
யோகி கும் சாதாரண மனிதர்களுக்கும் உள்ள வித்யாசம் இது தான், வேறு பரிணாமத்தில் வாழ்பவர் தான் யோகி. அனால் சன்யாசி கு அது திணிக்கப்படும், அறம் (எம நியம) தவிர அனைத்தையும் துறக்க வேண்டிய கட்டாயம். அனால் யோகி அவற்றை புரிந்து ஏற்றுக்கொண்டவர். 
அதனால் தயவு செய்து நான் ஆன்மிக செய்தி தான் அனுப்புகிறேன், ஜோதிடம் தானே, என்பதற்கான இடம் இதுவல்ல. 
இருளும் தனிமையும் யோகவாழ்க்கை கு முக்கியமானதாகும். அதை ஒரு நாள் உங்களுக்கு பரிசளிக்க பட்டால் அதை விட நரகம் வேறு எதுவும் இல்லை. அதை தன யோகம் மூலம் அதை பிடித்து ரசித்து ஏற்றுக்கொள்ள போகிறோம். அனைவருக்கும் அந்த நாள் உண்டு சிலருக்கு சீக்கிரம், சிலருக்கு நேரம் கழித்து வரும், அனால் வருவது உறுதி. 
சொல்ல வந்தது என்ன வென்றால், புரிந்து கொள்ளுங்கள் நாம் எங்கு என்ன செய்ய வந்திருக்கின்றோம் என்று. அதனால் நமக்கு ஆரவாரம் தேவை இல்லை, தத்துவங்கள் தேவை இல்லை, நமது குருமார்கள் சொன்னதை மட்டும் கேட்டு அனுஷ்டித்து, வாழக்கையை மனிதனாக வேறு பரிணாமத்தில் வாழ்வோம். 

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil