Friday 4 August 2017

Why Discipline in yoga. (Tamil)


Why Discipline in yoga. (Tamil)
இந்த ஒழுக்கங்கள் அனைத்தும் நல்லதையே  கற்று தருவதாக நமது முன்னோர்கள் நம்பினார்கள் கடை பிடித்தார்கள். இவை எந்த அளவுக்கு சாத்தியம், நம்மால் முழுதுமாக பின்பற்றி கடைபிடித்து விட முடியுமா, அப்படியே வாழ்க்கையில் இது ஒத்து போகுமா, நம்மை இளிச்சவாயன் என்று சொல்வார்களே (ஒழுக்க சீலருக்கு தற்போது மக்கள் கொடுக்கும் பெயர்) பிழைக்க தெரியாதவர், இன்னும் புதிதாக கண்டுபிடித்து சொல்வார்களே, உண்மை தான். எந்த கால கட்டத்திலும் இவைகளுக்கு இப்படி தான் இருந்தது மரியாதை
முதலில் இவைகள் என்ன என்ன என்று நல்ல ஒரு அறிவை எடுத்து கொள்ளவேண்டும். இதை நமது இல்லங்களில் மற்றும் நட்பு வட்டாரத்தில் (உண்மையான) உபயோகிக்க பழகி பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் சாதாரண வழக்கை யில் இருந்து விடுதலை பெறும்போது இவைகள் உங்களுக்கு பெரு உதவியாக இருக்கும். முக்கியமாக அடுத்து வரும் படங்களில் தான் உங்களுக்கு புரியும், இந்த ஒழுக்கங்கள் எவ்வளவு முக்கியம் என்று
யோகம் என்பது மிகவும் மிருதுவான அதே சமயம் மிக மிக வலுவானது. இது கலையோ, விளையாட்டோ அல்ல. இதை கற்பது எளிது ஆனால் வைராக்யத்துடன் நீண்ட வெகுகாலம் பயிற்சி செய்வது தான் முக்கியம். வேதத்தில்  சொன்னபடி யோகம் பயின்று பயிற்சி செய்பவன் மட்டும் தான் உண்மையான வீரன். தீரஹ. உரகத்தில் உள்ள அத்தனை பலமும் அந்த தீரனிடம் தான் இருக்கும். அதனால் யோகம் பயிற்சி செய்யவேண்டும். இதை விட சிறந்த படிப்பு இந்த உலகத்தில் இல்லை.
எத்துணை காலம் ஒருவர் செல்வத்திற்காக ஓட முடியும்.
எத்துணை காலம் ஒருவர் புலன் இன்பத்திற்காக் ஒட முடியும். (போகே ரோக பயம்)
எத்துணை காலம் மனம் விட்டு சிரிக்காமல் இருக்க முடியும்.
எத்துணை காலம் ஒருவர் பணம், புகழ், இன்பம், இத்தியாதி களுக்காக ஓடுவது. எப்போது முடியும் இந்த முடிவில்லாத தேவையல்லாத ஓட்டம்.
என்று அவர் அவரையே தேட ஆரம்பிப்பார்
அவர் என்று அமைதியை, உள்ளார்ந்த அமைதியை பெறுவார்.
என்று அவர் தான் இங்கிருப்பதற்கான அர்தத்தையும், காரணத்தையும் தேட முயலுவார்.
என்று அவர் சேர்த்து வைப்பது அசுர சம்பத்சி,
என்று அவர் தெய்வீக சம்பத்தை சம்பாதித்து சேர்பபார்.
கடைசியாக அவர் அண்டத்தின் அடிப்படையுடன் என்று இணைந்து, அத்துடன் அனைத்தும் கறைந்து கலப்பது எப்போது.

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya 



No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil