Saturday 13 October 2018

மஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2


மஹத் - 2
மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ 

அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்கள் இவ்வுலகத்துடன் தொடர்பில் உள்ளது ஸ்தூலமாக, இரண்டாவது மனம் 
மற்றும் அறிவு அவை இரண்டும் சூக்ஷுமாக இந்திரியாங்குளுடன் தொடர்பு கொண்டது, மூன்றாவதாக இந்திரியங்கள் மற்றும் மனம் அறிவை அகங்காரமே கட்டுப்படுத்துகிறது. நேரிடையாக மறைமுகமாக இவ்வுஉலக விஷயங்களில் பங்கெடுக்கின்றது. இவை அனைத்தையும் கடந்தால் தான் ஒருவர் தனது சித்தத்தை உணர முடியும். அங்கு தான் யோக வழக்கை ஆரம்பிக்கும். ஞான யோகம், கர்ம யோகம் போன்றவை மூலமும் இந்த இடத்திற்கு வர முடியும் அனால் க்ரியா யோகம் என்னும் ஸ்ரண யோகம் சரியான பாதையில் அழைத்து சொல்லும். ஏனெனில் சரியான வழிகாட்டு பாதை இல்லாதது தான் காரணமாகும். மற்ற யோகங்களில் முக்கியமாக பக்தி யோகத்தில் வழிபாடு தவிர அடுத்த நிலை என்பது இல்லை, இதனால் அவர்களுக்கு சிரத்தை என்பது இருக்காது. சரியான முறைகள் வழி இல்லாமல் இருப்பதால் அடுத்த நிலைகளுக்கு அந்த யோகிகளால் செல்ல இயலாமல் நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு செல்வார்கள். தியானம் அனுபவம், பாகுபாடு, உணர்தல் போன்றவை மற்ற யோகங்களில் இருப்பதில்லை. அனால் பெரிய மஹாத்மக்கள் பலர் மற்ற யோகங்களை பின் பற்றி சித்த ப்ரசாதனம் அடைந்து உள்ளார்கள். இவை அனைத்திற்கும் அடிப்படை அஸ்திவாரம் நல் ஒழுக்கம் மட்டுமே (எம நியம)
மிக சாதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கோவில் மடாலயம் போன்ற ஆன்மிக இடங்களுக்கு செல்லும்போது அந்த பக்தர் அமைதி, நிம்மதி கிடைக்கிறது என்பார்கள் என் சுமை இறங்கி விட்டது என்பார்கள், மிக சந்தோஷமாக இருப்பதாக சொல்வார்கள். அதன் உள்ளர்த்தம் என்னவென்றால், அவர்களின் தனிப்பட்ட சித்தம் காஸ்மிக் அதாவது சமஷ்டி சித்ததுடன் நேரடியாக சில மணிநேரம் தொடர்பு கொள்கிறது. அங்கே இந்திரியங்கள், மனம், புத்தி, அஹங்காரம் அனைத்தும் செயலிழக்க பட்டு இரண்டு சித்தர்களும் ஒன்றாக கலக்கிறது. அது தான் சொல்வார்கள் ஒரு இனம்புரியாத அமைதி என்பார்கள். வெறும் கட்டிடக்கலையை நம் முன்னோர்கள் செய்த சாதனை. அனால் அதே பக்தர் அந்த மதில் சுவரை தாண்டி வெளியே வந்தவுடன் மீண்டும் சாமான்ய மனிதனாக மனம், புத்தி, இந்திரியங்கள் மற்றும் அகங்காரத்துடன் சுமையுடன் சாதாரண மனிதராகிறார். அவருக்கு மீண்டும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது தெரிவது இல்லை. இது தினம் தினம் நாம் பார்க்க நடக்கும் நிகழ்ச்சி. சிறிது நேரம் அவர்கள் சித்தத்தை காஸ்மிக் சித்தத்தின் பிடியில் ஆழ்ந்த அமைதி, சாந்தி, சந்தோஷம், அன்பு, பரவசம் இத்தியாதிகளில் மூழ்கி இருப்பார்கள்.
சித்தசுத்தி மட்டும் தான் யோகியின் முதல் மைல் கல்லாக இருக்கவேண்டும். இந்த சித்தசுத்தி மட்டும் தான் யோகியை விவேகியாகவும், மிகுந்த வைராக்கியம் கொண்டவராகவும் கடைசியில் ஜிக்ஞாசு என்னும் ஞான பாதையில் செல்ல இயலும். இந்த  ஜிக்ஞாசுவால் மட்டுமே யோக பாதையில் கடைசி வரை செல்ல முடியும். இவருக்கு தான் அறிவொளி கிடைக்கும். சித்தத்தை பற்றி ஒரு கட்டுரையில் சொல்ல முடியாது அவ்வளவு பெரிய தலைபாகும். 
யோகத்தின் முதல் மைல் கல் தான் இந்த சித்தம். இதை உணர்ந்தவர்கள் தான் சித்தர்கள் என்னும் மஹாத்மக்கள். தொடர்ந்து இப்போது நாம் செய்யும் பயிற்சியின் மூலமே இந்த சித்தத்தினை உணர இயலும். இது முதலில் சிறிய பொறி போல் வந்து சொல்லும், தொடர்ந்த பயிற்சியின் மூலம் தான் அடுத்த நிலைகள் வரும். அப்போது மெதுவாக 19 தத்துவங்கள் (ஞான இந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, ப்ராணன்கள் 5, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் அனைத்தும் வீழ்ந்து சித்தம் மட்டுமே இருக்கும் அப்போது தான் வெளி உலகத்தில் இருக்கின்ற ஒன்றும் அவரை பாதிக்காமல், இருளில் ஒரு அமைதி, 

சாந்தி, சமாதானம், அன்பு போன்றவைகள் மட்டுமே எஞ்சி நிற்கும் நிலை தான் சமாதி ஸ்திதி என்ற நிலை ஏற்படும். 


Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil