அனைவருக்கும் வணக்கம்!
யோகம் என்றவுடன் அனைவருக்கும் பொதுவாக நினைவுக்கு வருவது த்யானம் மட்டுமே, அனால் நமது வாழக்கையை யோகா வாழ்க்கையாக வாழவேண்டும் என்பது தான் சரி, சில யோக முறைகளை தொகுத்து வழங்கியுள்ளேன் ,
* நமது சித்தத்தில் உள்ள வ்ருத்திகளை நிறுத்துவது (மகாத்மா பதஞ்சலி)
* கேட்டல், இசைத்தல், எண்ணத்தில் நிறுத்தல், பக்தி, பூஜித்தல், சேவை செய்தல், அடியவர்க்கு சேவை செய்தல், நட்பு கொள்ளுதல், கடைசியாக ஆத்மாவை அர்பணித்தல். (பகவத் புராணம்)
* ஐம்புலன்களும் அடக்கி மனதில் நிறுத்தி, மனதை அறிவில் நிறுத்தி அனைத்தையும் சித்தத்தில் நிறுத்துவதால் தான் கிடைக்கும் அமைதி (உபநிஷத்)
* காலம் ஒருவருக்கு ஒரு வெளியிடம் கொடுத்தது தன்னை உணர்வதற்கு அதற்கான வழி தான் யோகம் (உபநிஷத்)
* தனி ஒரு சித்தத்தில் உணர்ந்து அதை அண்ட வெளி சித்தத்தில் இணைத்தல் தான் யோக பாதை ஆகும் (உபநிஷத்)
* உன்னில் இருப்பது தான் அனைத்துமே, அனைத்தில் இருப்பது தான் உன்னிலும் இருக்கிறது என்பதை உணர்தலே யோகம் (பகவத் ராமானுஜர்)
* யோகம் என்பது ரஜோ தமோ குணத்தை நிறுத்துதலே ஆகும் (பகவான் ஆதி சங்கரர் )
* உன்னில் உன்னால் உன்னைத்தேடி நீயே செய்யும் பயணம் தான் யோகம் (குரு)
* தன்னை உயரத்தில் இருந்து சாட்சி பாவத்தில் செய்பவரும் இல்லை, தெரிந்தவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை என்று வெறும் சாட்சி யாக மட்டும் தன் வாழ்வை பார்ப்பது.. (குரு)
இவை அனைத்தும் சில யோக வழிகள், இவைகள் அனைத்தும் நமது வேதம் மற்றும் தூய நூல்களில் சொல்லப்பட்டவை.
எவர் ஒருவர் இவ்வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுத்து அதனை வாழ்க்கை யாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் பதஞ்சலி மகாத்மா ஹத யோக அனுஷாசனம்..
இது ஒன்று தான் ஆரோக்கியமும் அமைதியும் பெறும் வழி .
அனைவருக்கும் சர்வதேச யோக தின நல்வாழ்த்துகள்
சம்பத் யோகி .
Youtube.com/sampathyogi