எண்ணம் என்னும் விதை - 1 (TAMIL)
இந்த உலகம் முழுவதும் சுழல வைக்கும் மந்திரமே எண்ண அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களின் எண்ண அலைகள் அவ்வளவு சக்திவாய்தவை என்றும் சொல்கிறார்கள்.
இந்த என்ன அலைகள் என்ன எவ்வாறு அது ஒருவரை கட்டுப்படுத்துகிறது மற்றும் அதன் வேகம் ஆழம் பற்றிய பதிவே இது. பொதுவாக எண்ணம் என்பது எங்கே இருக்கிறது அது எப்படி இருக்கும் என்று பார்ப்போம், ஒரு நீர் நிலையில் நீர் நிரம்பி இருந்தால் அந்த நீர் ஒருவரது மனம் ஆகும், நீர்நிலையில் அடியில் உள்ள தரையே சித்தம் ஆகும், நீர்நிலையில் மேற்பரப்பு தான் எண்ணம் என்றும் அதன் பெயர் வ்ருத்தி என்றும் சொல்கிறது யோக சூத்திரம். அதாவது மனதின் மேற்பகுதி அது தான் நமது என்ன ஓட்டம். இது நீரின் மேற்பரப்பு அசைந்து கொண்டே இருப்பது போல நிலையில்லாமல் அசைந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணம் என்னும் அலைகள் அசைந்து அசைபோட்டுக்கொண்டே இருப்பதை வைத்து தான் ஒருவரின் வாழ்க்கையே நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள் ஞானிகள். இதை தான் அவ்வைப்பாட்டி "வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளதனையது உயர்வு" என்று. எண்ணங்களை பொறுத்து தான் ஒருவரின் நிலை,வளர்ச்சி, வீழ்ச்சி, நல்லவைகள், கெட்டவைகள், இன்பம், துன்பம் இவை அனைத்தையும் முடிவு செய்வதே இந்த என்ன அலைகள் தான்.
அடிப்படையாக மனது என்பது மேல் தட்டு நடு மனது ஆழ் மனது என்று மூன்றாக பிரிப்பார்கள், நடுவில் உள்ள மனது தான் ஒருவருடைய அகங்காரத்துடன் இணைந்தது, மேலும் அகங்காரம் இந்த நடுமனதின் மூலமாக இந்திரியங்களை இயக்குகிறது, அப்போது அகங்காகரத்தை இயக்குவது தான் இந்த எண்ண அலைகள். ஒருவரின் எண்ண விதைகளே செயலாகின்றன என்று கொண்டால், என் உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்கிற எண்ணம் உங்கள் பிரச்சனை இல்லாவிட்டாலும் கொண்டுவந்து சேர்க்கிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற பழமொழி இதன் அடிப்படையில் தான். அனால் பொதுவாக நல்ல விஷயங்களில் நம்பிக்கை வைக்காதது அதே சமயம் கெட்ட விஷயங்களை அதிகம் நம்புவதும் தான் இதன் அடிப்படையே. எனக்கு எதிரி அவர்தான் என்று எண்ணம் எண்ணியவுடனே அவர் உங்களுக்கு எதிரியாகி விடுவார்.
ஒரு சிந்தனை பள்ளி என்ன சொல்கிறது என்ன சொல்கிறது என்றால் உங்கள் என்ன அலைகள் மூலம் என்ன செலுத்துகிறீர்களோ அதுவே பல மடங்காக உங்களிடம் திரும்ப வருகிறது என்று. நான் பணக்காரனாகி விட்டேன் என்று அழுத்தமாக நினைத்து கொண்டாடுங்கள் நீங்கள் உங்களை அறியாமலே பணக்காரர் ஆகிவிடுவீர்கள் என்று (வாரன் பப்பெட் இதையே தான் சொல்வார்). நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை எண்ணங்களில் நிறுத்தி கனவு காணுங்கள் அதையே அடைந்து விட்டதாக கொண்டாடுங்கள். இந்த எண்ண அலைகள் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பது தான்.
மனம் என்று தான் சொல்கிறோம் அனால் எண்ணத்திற்கு மட்டும் தான் அத்துணை சக்தி உண்டு என்று சொல்கிறார்கள், நமது புனித நூல்களும் அதைத்தான் சொல்கின்றன. பொதுவாக நமது அனைத்து மதங்களில் உள்ள வழிபாடுகள் அனைத்துமே கடவுள் என்ற ஒன்றை வாழ்த்திக்கொண்டே இருக்கும் ஏன் என்றால் திரும்ப திரும்ப அப்படி வாழ்த்துதல் தொடர்ந்து வாழ்த்துதல் மூலம் அவர்களில் எண்ணங்களில் அனைவரையும் வாழ்த்தவேண்டும் அதாவது உங்கள் எண்ணத்தில் என்ன அலைகள் நேர்மறையான சிந்தனை உதிக்க வேண்டும் என்பது தான். எண்ணங்கள் தான் செயல் அதனால் எண்ணங்களில் நேர்மறையான விதைகளை விதைப்பதன் மூலம் உங்கள் எதிர்மறையான எண்ணங்கள் தடுக்க வாய்ப்புண்டு என்பதன் சாராம்சம் தான் இது.
எண்ணங்கள் மனதின் மேற்பகுதி அவை நிலையாக நில்லாது சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் 70000 வேறு வேறு எண்ணங்களில் மூழ்குகிறார் என்று சொல்கிறது ஒரு சிந்தனை. அதாவது நீங்கள் ஆழ்த்த உறக்கம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் இந்த என்ன அலைகளானது மாறிக்கொண்டே இருக்கும். இதை நிறுத்துவது என்பது நடவாத காரியம். மேலும் இந்த எண்ணங்கள் அவரின் குணத்தை பொறுத்தே அமைகிறது நீங்கள் தமோ குண வசத்தில் இருந்தால் எதை எடுத்தாலும் பயப்படுவார்கள், அதே சமயம் அவரின் எண்ண அலைகள் அவரின் பயத்தை மேல் மேலும் பெருக்கெடுக்க வைக்கும். அவரே ரஜோ குண வசத்தில் இருந்தால் கோபம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை பெருமை என்று வளர்ந்து கொண்டே போகும். ஒருவரை வளர்ப்பதும் இந்த எண்ணங்கள் தான் வீழ்த்துவதும் இந்த எண்ணங்கள் தான்.
எப்போதுமே மனம் பிரச்சனை ஆவதில்லை, மனதின் நிலைப்பாடு தான் பிரச்சனை என்பார்கள் அதாவது மைண்ட் செட். ஏனெனில் உங்கள் எண்ணத்தில் சாதக பாதகங்களை ஆராய்ந்து ஒரு முடிவு செய்து இப்படி இருந்தால் தான் இந்த வேலை நடக்கும் அல்லது செய்ய முடியும் என்று எண்ண அலைகள் அழுத்தமாக மனதில் பதிய வைத்திருக்கும். அதில் சிறு மாற்றம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்காது. உதாரணமாக சூடாக காபி குடிப்பவர்கள் சூடு குறைந்தாலும் குடிக்க மாட்டார்கள் காரணம் அவர் எண்ணம் அவர் மனதை அவ்வாறு அமைத்து விட்டது. இதே போல் தினமும் உங்கள் வாழ்க்கையில் சோதித்து பார்த்தால் புரியும் உங்களுக்கே எவ்வளவு உங்கள் எண்ணம் உங்களை ஆளுமை செய்கிறது என்று. மேலும் இந்த என்ன அலைகள் எப்பொதும் ரஜோ மற்றும் தமோ குணத்தின் வசதியே மட்டும் தான் இருக்கும். மாறி மாறி வெவ்வேறு சிந்தனைகள் உங்களை பயம் கொள்ள செய்வது, உங்கள் கடமைகளில் இருந்து பிழற செய்வது, கடமையை தள்ளி போடுவது. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை ஊட்டுவது, முக்கியமாக உங்களில் பொறாமை, கோபம், ஏக்கம், வெறி மொத்தத்தில் உங்களை வேறு வழிகளில் கொண்டு செலுத்தும் வேலையை முழுதும் செய்வது இந்த எண்ணங்களே ஆகும். இந்த எண்ண அலைகள் மனித வாழ்க்கையின் அடிப்படை இதை புரிந்து கொள்ளவது கைதேர்ந்த விஞ்ஞானமாகும். இதை விவரித்து சொல்ல ஆண்டுகள் பலவாகும் அவ்வளவு சக்தி வாய்ந்தது. நுனிப்புல் மேய்ந்தது போல் கூறியுள்ளேன். எண்ணம் தான் செயலாகும், "மனசா வாச கர்மணஹா" எண்ணம் அதில் உதிப்பதை போல் பேச்சு அதே போல் செயல் எண்ணம் தான் செயலாகிறது.
எண்ணம் எப்படி தோன்றுகிறதோ அதற்கேற்றாற்போல் அவரது அகங்காரத்தை தூண்டி விட்டு மனதின் மூலம் இந்திரியங்களை இயக்கி செயல் படுகிறது. இவ்வாறு தான் ஒரு செயல் நடக்கிறது. ஏனெனில் ஒருவரது எண்ணம் அந்த இடத்தில் இல்லாத பட்சத்தில் அவர் இந்திரியங்கள் இயங்காது. உதாரணமாக கண்ணால் பார்ப்பது எல்லாமே பதிவதில்லை. வகுப்பில் மாணவன் எண்ணம் எங்கேயோ செல்ல இவன் வகுப்பை கவனிப்பது போன்ற பாவனை இருக்குமே தவிர. பார்த்தாலும் கேட்டாலும் மூளையை பதியாது. எண்ணம் வேறு இடத்தில் இருந்தால் வெறும் உடல் மட்டும் தான் அங்கிருக்கும் என்பதன் மூலம் எண்ணத்தின் முக்கியத்துவம் தெரியவேண்டும்.
கடைசியாக புத்த மஹாத்மா சொன்னது "ஆசையே துன்பத்திற்கு காரணம்", ஆசை எங்கே வித்திடுகிறது என்று பார்த்தால் அவை முதலில் ஆரம்பிக்கும் இடம் இந்த எண்ண ஓட்டம் தான். இது எனக்கு கிடைக்கும் பட்சத்தில் என்னக்கு சந்தோசம் உண்டாகும் அதனால் அது எனக்கு வேண்டும் என்று ஆசைப்படுவது உங்கள் எண்ணம் தான். அந்த ஆசை நடக்காது என்கிற நிலை வரும்போது ஏக்கம் (தமோ குணம்) தலை தூக்கும், அடுத்த நிலை அதன் மேல் கோபம் (ரஜோ குணம்) வரும், அடுத்த நிலை அது யாருக்கும் கிடைத்து விடுமோ என்கிற பொறாமை (தமோ) அது மேலும் வளர்ந்து குரோதம் (ரஜோ) அதற்கு மேல் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்ல தேவை இல்லை. முழு பலன் துன்பம், துயரம் மட்டுமே. இதற்கான அடிப்படை காரணம் எண்ணம் என்கிற அலை தான்.
எண்ணத்தை நிறுத்த முடியாது, எண்ணத்தினால் தான் நம்மை மற்றும் தீமை, எண்ணத்தின் மூலமே உங்களால் நடக்கின்ற அத்தனையும் முடிவு செய்யப்படுகிறது. எண்ணம் மேம்பட்டால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும், எண்ணம் வீழ்ந்தால் அவரையே வீழ்த்திவிடும் என்றால் அனைத்திற்கும் மூல காரணம் எண்ணம் தானே.
ஆகமொத்தம் ஒருவரை நல்லவராகவோ கெட்டவராகவோ ஆக்குவது இந்த எண்ண அலைகள் தாம். இவைகள் எவ்விதத்தில் யோக முறைக்கு சம்பந்தம் உள்ளது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment