மஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும்.
மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன்ன உடல், ப்ராண உடல், மனோ உடல், விஞ்ஞான உடல் இவைகளை தாண்டி உள்ள ஆனந்த மயமே இந்த சித்தம். யோகத்தின் கடைசி தன்னை உணர்தல் இங்கு தன்னை என்பது தன் சித்தத்தை உணர்தலாகும் அவர்களே சித்தர்கள் ஆவார்கள். எட்டு அங்கங்களில் ப்ரத்யாஹாரம் (ஐந்தாவது நிலை) உங்களை அழைத்துச்செல்வது இந்த சித்தத்திற்கு மட்டுமே. அதாவது இந்திரியங்களை மனதில் மடக்கி, மனதை அறிவில் மடக்கி, அறிவை இந்த சித்தத்தில் மடக்குவதன் மூலம் அந்த ஆத்ம பூரண சாந்தி அடைகிறது என்று உபநிஷத் கூறுகிறது. சித்தத்தை உணருதல் மூலம் ஒருவரின் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இது தான் ஓரளவுக்கு யோகத்தின் உச்சம். இதன் பிறகு அவர்கள் பயிற்சி வேறு பரிணாமத்திற்கு மாரி விடும்.
ஒன்றை மிக தெளிவாக புரிதல் வேண்டும், இந்த சித்தத்தை உணர்தவர்கள் வேறு மாற்றங்கள் ஏதும் வராது, அவர்கள் ஸ்தூல சரீரம் எப்பொதும் போல் இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சூக்ஷ்ம சரீரத்தில் மட்டும் தான் இருக்கும். அதனால் சித்தத்தை உணர்தவர்கள் சன்யாசி ஆகி விடுவார்கள் என்றோ அல்லது மாய மந்திரம் செய்வார்கள் என்றோ எண்ண வேண்டாம். அவர்களிடம் ஒரு அமைதி அதாவது பூரண சாந்தி இருக்கும். அவர்கள் இவ்வுலகிற்கு பாரமாக இல்லாமல் இயற்கையுடன் கலந்து இருப்பார்கள்.
"ஏதோ ஒன்று நீங்கள் பிறப்பதற்கு முன்பு, மற்றும் உங்கள் முடிவிற்கு பின்னும் ஏதோ ஒன்று தொடர்ந்து வருகின்றது" இது அனைத்து மத வேதங்களும் சொல்லும் ஒன்றாகும், அது எனது வென்றால் உங்கள் சித்தம் மட்டுமே. நமது வேதங்களிலும் உங்கள் பதிவுகள் எல்லாம் நிறைந்த ஒரு நினைவகமாக இந்த சித்தம் உள்ளது. இதில் உள்ள நினைவுகளை அழிக்க இயலாது. இதுவரை அறிவியல் இதை கண்டறிய வில்லை. அனைத்து விதமான யோகங்களிலும், உங்கள் மனம், அகங்காரம், கடைசியாக உங்கள் அறிவு இவை அனைத்தும் உங்களை விட்டுஅகலும் அப்போது இந்த சித்தம் மட்டும் தான் உங்களுக்கு உதவி செய்து அண்ட சக்தியுடன் கலக்க உதவி செய்யும். நமக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் சிம் கார்டு போன்றது இந்த சித்தம் (தனிப்பட்ட சித்தம்), சேவை வழங்குபவர் (சமஷ்டி சித்தம்). நமது அறிவ வரையறை கு உட்பட்டதே ஆகும். அதனால் ஒரு சிம் கார்டு இன்னொரு சிம் கார்டு உடன் தொடர்பு கொள்ள முடியும். சேவை அளிப்பவரை தொடர்பு கொள்ள இயலாது. அதே போல் கார்டு இல் உள்ள சேமிக்க பட்ட நினைவுகளை பார்க்க முடியாது. இவை அனைத்தும் சித்தத்தில் நினைவாக பதியப்பட்டு இருக்கும். அவற்றை காண்பதற்கு பயிற்சி (ஸ்ரண யோக) வேண்டும். அவ்வாறு யோகா பயிற்சியின் மூலம் சித்தம் மட்டும் பல அதிக அறிவு கிடைக்கும், அவைகள் தான் சித்திகள் என்பார்கள்.
No comments:
Post a Comment