Tuesday, 1 August 2017

மன்னிப்பு (கோருதல், கேட்டல்).


மன்னிப்பு (கோருதல், கேட்டல்).
இன்று நாம் பார்க்க போகும் தலைப்பு சிறிது வித்தியாசமானது, அனால் முக்கியமானது, யோகத்தில் அனைத்துமே முக்கியமானது தான். மன்னித்தல் மன்னிப்பு கோரல். நாம் யோகா பாதைக்குள் இறங்கும் முன் இதை ஒவ்வருவரும் செய்யவேண்டும். நாம் இவ்வளவு நாட்கள் பார்த்த ஒழுக்கங்கள் நீங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தால் நீங்கள் தேடுபவராக மாறி விடுவீர்கள் இதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்வில் தவறுகள் குறைக்க படும். தேடுபவரின் மூளை மற்றும் அகங்காரத்தின் சுத்தம் மிக அவசியம், அதனால் தான், இந்த கட்டம் மிக அவசியமாகிறது. மனிதர்கள் தவறுகளால் நிரப்ப பட்டிருக்கிறார்கள். நேர்த்தி என்ற வார்த்தை க்கு சரியான அர்த்தம் அல்லது எது நேர்த்தி என்ற விளக்கம் இதுவரை யாரும் சொன்னதில்லை. அப்படி இனிமேல் தவறுகள் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஏற்கனவே செய்து சேர்த்து வைத்துள்ள தவறுகளுக்கு வெளியேற்ற பட வேண்டுமல்லவா. இது எவ்வாறு சாத்தியம் என்றால், மன்னிப்பு (கோருதல், கேட்டல்).
எப்படி இது சரியாக வரும், உங்கள் உள்ளே என்ன இருக்கிறது என்பது வேறு யாருக்குமே தெரியாது. நீங்கள் செய்த அனைத்து தவறுகளும், குற்றங்களும் உங்கள் மனதின் ஆழத்தில் இருக்கும். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகள் இதில் அடங்காது. நீங்கள் வளர்ந்த பின் நீங்கள் நல்லது எது, கெட்டது எது என்று உணர ஆரம்பித்த பிறகு நடந்த தவறுகள். எத்தனை பேருக்கு கெட்டது நினைத்தது, செய்தது, செய்வேன் என்று பேசியது (த்ரி கரணம்), எத்துணை முறை தவறு செய்தது, எவ்வளவு பாதிப்பு இருக்க வேண்டும் என்று யோசித்து தொல்லை கொடுத்தது. இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் யார் யாருக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுத்து இருக்கிறீர்களோ அனைத்தையும் ஞாபக படுத்துங்கள், உங்களுக்கு யார் எல்லாம் தவறு செய்தார்களோ, தொல்லை தந்தார்களோ அதையும் ஞாபக படுத்தி மனதில் கொண்டு வாருங்கள். நாம் இப்போது மன்னிப்பு கேட்க போகிறோம், மன்னிக்க போகிறோம்.


Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya  

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil