வாழ்த்துகள் அனைவருக்கும்
நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம்.
1. நாம் ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமான உடல், பிராணாயாமம் பயிற்சி, மற்றும் நல்லொழுக்கம் முதலியவை.
2. மனோமயத்தில் நாடிகள் மற்றும் சக்கரங்களில் பயிற்சி.
3. ஸ்ரவணம், ஸ்வதியேய் மூலம் தொடர்ந்து கேட்டல், படித்தல் மூலம் நமது நிலையை அறிந்து கொள்வது.
இம்மூன்று வழிகள் தான் ஒருவரை ஸ்ரண யோகி யாக மற்றும். இப்பயிற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டும், அனால் அவை உங்கள் உலக வாழ்க்கையை பாதிக்க கூடாது. மெதுவாக யோக பயிற்சிகள் யோக முத்திரையை எல்லா கடமைகளில் பதிக்கும்.
இப்பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான நிலைகள் உள்ளன, அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு செல்ல முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் கடமையை செய்து கொண்டே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ஆழ் நித்திரையை தவிற.
இதில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள கூடாது, நிலைகள் வரவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடரலாம். அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய கூடாது. அளவுக்கு அதிகமாக வேகமோ அல்லது பலாத்கார பயிற்சி உங்களை பிரச்சனையில் விடும். நீரோடை போல ஓட வேண்டும், அதன் வளர்ச்சி ஒரு தாவரத்தை போல வெளியே தெரியாது மெல்ல உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். மிகுந்த வைராக்கியம் மற்றும் விவேகத்தின் மூலம் பயிற்சி செய்யவேண்டும்.
பயிற்சி செய்ய இடம் நேரம் காலம் ஏதும் முக்கியமில்லை, அமருவதற்கும் எந்த கட்டாயமமுமில்லை. "சுகம் ஸ்திரம் ஆசனம்" வசதியாக அமர்தல் நலம்.
"சமம் காய ஸிரோ க்ரீவம் தராயம் அசலம் ஸ்திரஹ" நீங்கள் எப்படி அமர்ந்து பயிற்சி செய்தாலும் உங்கள் முதுகெலும்பு கழுத்து நேர் கோட்டில் இருக்குமாறும். தலை சிறிது மேல் நோக்கியும் அமர வேண்டும். புது பயிற்சி செய்பவர்கள் அரை இருட்டு மற்றும் அமைதியான சூழ்நிலை தேர்ந்தெடுத்தல் நலம்.
தனிப்பட்ட மூச்சு விடுதலோ அதை கவினதாலோ தேவை இல்லை, அதேபோல் மனதை கட்டு படுத்த தேவை இல்லை, அமைதியாக இருந்து பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் மூக்கின் நுனியை சில வினாடிகள் தொடர்ந்து கண்ணை திறந்த நிலையில் பாருங்கள், பிறகு மெதுவாக மேலேற்றி புருவ மத்தி வறை கொண்டு சென்று நிறுத்துங்கள், இப்போது கண்களை மூடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். புருவ மத்தியில் ஒரு வலி அல்லது நமைச்சல் அல்லது உணர்வின்மை போல் வரும். அப்படியே அதை நிறுத்தி பயிற்சி செய்யவும். சிலருக்கு வராவிட்டால் திரும்ப மூக்கின் நுனியில் இருந்து ஆரம்பிக்கவும்.
சிலருக்கு வலி அதிகம் இருந்தால் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சி செய்யவேண்டும்.
இதை மேலும் மேலும் வரும் வகுப்புகளில் விளக்குகிறேன். பயிற்சி முக்கியம்.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#sranaguru #guru #sranayoga #yogi #rajayoga #hathayoga #chakras #kriya #mind #body #soul #meditation #karma #Reiki #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya
No comments:
Post a Comment