இன்றய வகுப்பு - 8
நியம - தபஸ் (சகிப்பு தன்மை)
நேரிடையான அர்த்தம் சகிப்பு தன்மை தான். இந்த ஒழுக்கம் இருந்தால் மட்டுமே மற்ற ஒழுக்கங்கள் காப்பாற்ற படும். இந்த ஒழுக்கத்தை தனிமனிதனும், மற்றும் பொதுவிலும் பின்பற்ற வேண்டும். இது என்னவென்று பார்த்தால், தினம் தினம் நாம் சந்திக்கும், நம்மை எரிச்சலடைய வைக்கும், கோப்பபடுத்தும் அத்தனையும் ஏற்று கொள்ள வேண்டியது தான் இவ்ஒழுக்கமாகும். நம்மவர்கள் மற்றவர்களை தொந்தரவு செய்தல், வெருப்பேற்றுவதன் மூலமாக சந்தோஷமடைவார்கள். அதற்கு நாம் செவிசாய்ககும் பட்சத்தில் அது நம்மை மிகவும் சங்கடத்தில் உள்ளாக்கும். நள்ளிரவில் குழந்தையின் அழுகை மிக பாதிக்கும். அதேபோல் வீட்டில் பெரியவர்கள் தொண தொண என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல் தோன்றும் ஆனால் அவைகளை காது கொடுத்து கேட்க நாம் தயாறாக இருப்பதில்லை. இரவில் ஊளயிடும் நாய்யின் சத்தம். எல்லா வற்றிற்கும் மேலாக வண்டி ஓட்டும் போது விடாமல் ஹார்ன் அடிப்பவரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என தோன்றும். நாம் நமது பொறுமையன் உச்சகட்டத்திற்கு இட்டு செல்லும் இது போன்ற நிகழ்வுகள். இங்கே அந்த ஒழுக்கம் என்ன சொல்கிறது என்றால், இவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளங்கள், ஒப்புக்கொள்ளுங்கள் மேலும் அதை பாராட்டுங்கள்.
அதெப்படி முடியும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொள்ளலாம், அதை ஒப்பும் கொள்ளலாம் எவ்வாறு அதை பாராட்டுவது? மிகப் பெறிய கேள்வி. குழந்தை அழுகிறது என்று வைத்துகொள்வோம். உடனே நீங்கள் குழ்ந்தை அழும் காரணத்தை யோசிக்க வேண்டும், ஒன்று பசி அல்லது வலி அப்படி நினைத்தால் கோபம், எரிச்சல் குறையும். அடுத்து குழந்தையின் அம்மா மேல் கோபம் வரும் என்ன செய்கிறார்கள் என்று, ஏதேனும் முக்கிய வேலையோ அல்லது உணவு தயார் செய்து கொண்டு இருக்கலாம என்று எண்ணும் போது ஒத்துக்கொள்கிறீர்கள். பாவம் அந்த குழந்தை தவிக்கிறது, அழுகிறதே என்று நீங்கள் உங்கள் ஆழத்தில் அக்குழந்தையை சமாதானப்பட வேண்டும் அல்லது வலி குறையவேண்டும் என்று ஆழ் மனதில் சிந்தித்தல் பாராட்டவதாகும். ஏனெனில் பிரச்சனையில் இப்போது நீங்களும் உள்ளடக்கம். இவ்வாறாக இந்த ஓழுக்கம் உதவி புறியும்.
தபஸ் எனபது மிக நுணுக்கமான ஒன்று, நிதமும் இதை பல வேலைகளுக்கு நடுவே பல தொல்லைகளை சந்தித்து கொண்டே இருப்போம். சிலவை நம்மை பாதிப்பதில்லை, சில விஷயங்கள் நம்மை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். நமது வீட்டில், சாலையில், பயணத்தின் போது மிக அதிகம், வேலை பார்க்கும் இடத்தில், கடைத்தெருவில், எங்கு எல்லாம் மற்றவர்களுடன் பொது தொடர்பில் இருக்கிறோமோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவைகளை விட்டு போகவும் முடியாது, மிகவும் கவனம் செலுத்தினால் நமது கடமைகள் கெட்டுவிடும். அதனால் முகம் பாராமல் போகவும் முடியாது அப்போது நீங்கள் இந்த தபஸ் ஐ உபயோகிக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஏற்று கொள்ள முயலுங்கள், அவர்கள் செய்வது உங்களுக்கு தலைவலி ஏற்படுவதாக இருந்தாலும், ஏற்று கொள்ளுங்கள், வழி விடல் என்பது நமது அகராதியிலே இல்லாதது. அடுத்தவர் போகட்டுமே, நாம் சிறிது பொறுத்து போவோம் அல்லது நமது முறை வரட்டும் என்ற காத்திருப்பு நம்மிடம் இல்லை. நாம் போகிறோமோ இல்லையோ, அடுத்தவருக்கு வழி விடுவதில்லை. வழிவிடல் என்பது எல்லா விதத்திலும், வெறும் பொறுமை மட்டுமல்ல, மனது விரிந்து பரந்து இருக்கவேண்டும். நமக்குள்ளதை யாரும் பறிக்க முடியாது என்பதை யாரும் உணர்வதில்லை அதேசமயம், மற்றவர்களுடையதை நாம் எடுக்க முடியாது. மற்றவர்களுக்கு நாம் வழி விடும் பட்சத்தில் தான் நமக்கு வழி கிடைக்கும் என்பது அண்டத்தின் விதி. அதே போல் என்ன நாம் நம்மை சுற்றி நடக்கும் பிடித்த பிடிக்காத எல்லா வற்றையும் அப்படியே ஏற்று கொள்ள பழகவேண்டும், பிறகு தான் ஒப்புக்கொள்ளுதலும், அதை பாராட்டுவதும் பின்னால் வரும். நாம் கொடுத்தால் தான் நமக்கு வரும், அதே போல் நாம் சகித்து கொண்டால் தான் நம்மை அடுத்தவர்கள் சகித்துக்கொள்வார்கள்.
முக்கியமான ஒரு காரணியை தபஸ் லிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிவில் வெரும் நல்லதை அல்லது நல்லதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடக்கும் அனைத்துமே இரண்டு பக்கங்கள் இருக்கும், அதவது நல்லது மற்றும் கெட்டது. ஆனால் தேடுபவர் நல்லதாக, நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு தன் பயணத்தை தொடரவேண்டும். ஏனெனில் நாம் இவ்வளவு பயின்ற ஒழுக்கங்கள் நல்லவற்றை எப்படி அடைவது என்பதை மட்டும் தான் கற்றுதந்தது. கெட்டது என்ற ஒன்று உள்ளே வெளியே அண்ட சராசரத்திலே இல்லை. கெட்டது என்பது உங்கள் அகங்காரத்தின் வாயிலாக மனதில் திணிக்கபட்டது தான். தேடுபவர் நல்லதை பார்தது எடுத்து அதன் வழி பின்பற்ற வேண்டும். அனைத்திலுமே நல்லது மட்டும் தான் உள்ளது என்பதை ஆணத்தரமாக நம்ப வேண்டும், அப்போது தான் உங்களல் எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு பாராட்ட முடியும்.
உங்கள் பொறுமையை வலுவானதாக்கும், மான - அவமானம், சுகம் - துக்கம், மண் - தங்கம், இவை அனைத்தையும் சம மாக பார்க்கும் மனதை உருவாக்கவேண்டும்(இது நடக்காது, சிலகாலம் பயிற்சிக்கு பிறகு தான் வரும்), இப்பயிற்சியின் மூலம் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் நல்லவிதமாகவும், இலகுவாகவும் எடுத்தது கொள்ளும் மனா பக்குவம் வரும்.
"மான அப்மான சீதோஷ்ண சுகதுக்க சம லொஷ்டஅஷ்ம காஞ்சனஹ" - பகவத் கீதை.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through
Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#sranaguru #guru #sranayoga #yogi #rajayoga #hathayoga #chakras #kriya #mind #body #soul #meditation #karma #Reiki #KUNDALINI #THAPAS #AHIMSA
#SATHYAM
#DESIRE
#EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana
#Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya
No comments:
Post a Comment