Day -1 Ahimsa tamil
எல்லா ஒழுக்கங்களும் ஒன்று போலவே தெரிந்தாலும் ஒவ்வொன்றுக்கும் தனி
தன்மை உண்டு ஒன்றோடு ஒன்று
கலந்து இருக்கும்.
அஹிம்சை என்பது அடுத்தவருக்கு எந்த
விதத்திலும் கேடு வரும் என்று
தெரிந்தும் அதை செய்யகூடாது. உண்மையில்
உங்களது செயலினால் பாதிக்க பட்டவரின் வலியை
அவர் இடத்தில் இருந்து அந்த வலியின்
வலியை உணரவேண்டும். உதாரணமாக நீங்கள் யாரேனும் ஒருவரால்
அடிக்கப்பட்டால் அடிப்பவருக்கு உங்கள் வலி தெரியாது,
நீங்கள் எவ்வளவு வேதனைக்கு உள்ளநீர்கள்
என்பதும் அவரால் உணர முடியாது.
உங்கள் இடத்தில் அவர் இருந்து உங்கள்
வேதனையை அவர் உணர முடியுமேயானால், மேலும்
அவர் நீங்கள் பட்ட வேதனையை
அனுபவித்தாரேயானால், மீண்டும் அந்த இம்ஸையை உங்களுக்கு
திரும்ப செய்ய மாட்டார்.
இதில் நாம் ஆனது சிந்திக்க
வேண்டியது வலி அதன் வேதனை
மட்டுமே. வினையின் விளைவு.
மனித இனம் தான் இவ்வுலகிலேயே மிகசிறந்த உயிரினம். அந்த மனித இனம்தான் இயற்கை செல்வங்களை பாதுகாக்க வேண்டும். அனத்து உயிரினங்களும் இயற்கை அன்னைக்கு சொந்தமானவயே. மனித இனம் எப்போதுமே மற்ற உயிரினங்களை உதவி செய்து பாதுகாக்கவேண்டும் அதை விடுத்து எந்த உயிரினத்தையும் தொல்லை கொடுக்கவோ, அவைகளை காயப்படுத்தவோ கூடாது. ஒரு எரும்பையோ நாயையோ கூட துச்சமாக நினைத்து காய படுத்தவேண்டும் என்று மனதாலும்்நினைக்க கூடாது. தேவைக்காக ஓர் மரத்தை வெட்டினால் கூட மரத்திடம் அனுமதி கேட்ட பிறகே வெட்ட வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் முன் கடல் அன்னையிடம் அனுமதி கேட்பது போல. மனித சக்தி அதிக சக்தி வாய்ந்தது அதை கொண்டு அடுத்தவர்களயோ. வேறு உயிரினங்களயோ காயப்படுத்துவது முறையல்ல. அஹிம்சை மிகவும் மென்மையான ஒழுக்கம். வலிகளையும் அதன் அயல்புகளையும், சூழ்நிலைகளையும் பாதிக்கபடாமலே உணரும் முறை. இந்த அஹிம்சையை உங்கள் வாழ்கையில் கடைபிடிப்பதன் மூலம் மனம் விளைவு களை ஆழ்ந்து சிந்தக்க பயிற்சி கிடைக்கும்.
ஒருவர் மற்றொருவரை கொல்வதற்கு அம்பு தேவை இல்லை. அதற்கான வார்த்தைகள் தேர்ந்துஎடுத்து அதன் மூலம் எய்தால் அதன் தாக்கம் நேரடியாக தாக்குவதை கூட கொடுமையாக இருக்கும். சில நேரங்களில் குடும்பங்களே தவறான வார்த்தைகளால் கொல்லப்பட்டதுண்டு. பேசுவதற்கு முன் நாம் சிந்திப்பதில்லை. ஒருவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் கெட வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஹிம்சை தான் என்பதை நாம் உணர வேண்டும். எண்ணத்திலும், நமது பேச்சிலும் மற்றும் செயலிலும் அடுத்தவருக்கு இடையூறாக கூட இருக்க அனுமதிக்க கூடாது. இது தன அஹிம்சை.
எடுத்துக்காட்டு: பாரிமன்னன் முல்லை கொடிக்கு தேர் கொடுத்தது, முல்லை கொடி கஷ்ட படுவதாக நினைத்ததனால் தான்.
இந்த பயிற்சிகள் மூலம் மனதின் கடிவாளத்தை உங்கள் கையில் வைக்க பழக வேண்டும் அப்போது தான், யோகத்தின் பல நிலைகளில் மனதை தண்டி செல்ல வழி கிடைக்கும்.
மொத்த உலகமும் அடுத்தவர்கள் மேல்தேவை இல்லாமல் குறை கூறுதல், மற்றவர்களை கஷ்டப்படுத்துதல் இல்லாமல் இருந்தாலே உலகம் அமைதியாக சுற்றும்.
எடுத்துக்காட்டு: பாரிமன்னன் முல்லை கொடிக்கு தேர் கொடுத்தது, முல்லை கொடி கஷ்ட படுவதாக நினைத்ததனால் தான்.
இந்த பயிற்சிகள் மூலம் மனதின் கடிவாளத்தை உங்கள் கையில் வைக்க பழக வேண்டும் அப்போது தான், யோகத்தின் பல நிலைகளில் மனதை தண்டி செல்ல வழி கிடைக்கும்.
மொத்த உலகமும் அடுத்தவர்கள் மேல்தேவை இல்லாமல் குறை கூறுதல், மற்றவர்களை கஷ்டப்படுத்துதல் இல்லாமல் இருந்தாலே உலகம் அமைதியாக சுற்றும்.
No comments:
Post a Comment