இன்றைய வகுப்பு – 6
நியம - சௌசா (சுத்தம் )
கட்டுப்பாடு (நியம ) - சௌச்ச (சுத்தம்)
மேலோட்டமாக சொன்னால் சுத்தம் என்ற பொருள் தான் வரும். முதலில் நமது உடம்பு, பின் மனம், நமது வீடு,நமது தெரு, நமது நகரம், கடைசியாக நமது நாடு. ஏன் நான் நமது நாட்டை சுத்தம் செய்யவேண்டும் அது தான் ஸ்வச் பாரத் உள்ளதே? அப்படி ஒரு எண்ணம் கூட நம்மிடையே இருக்க கூடாது. சுத்தம் நமது எண்ணத்தில் ஆரம்பித்து, பேச்சில் மெருகேறி, செயலில் அரங்கேறவேண்டும். எல்லா இடங்களிலும் சுத்தம், எல்லா விதங்களிலும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுடைய அடுத்த கேள்வி சுத்தம் எம வில் அல்லவே இருக்கவேண்டும், நியம பொதுவில் இருக்கும்போது உள்ள ஒழுக்கம் என்று கூறினீர்கள்?. நீங்கள் குளிக்கவில்லை துவைத்த ஆடை அணியவில்லை பஸ் இல் பயணம் செய்கிறீர்கள் என்ன நடக்கும் உங்களுடன் பயணம் செய்பவர்களின் நிலை. பொதுவாக நமது உடம்பை சுத்தமாக வைத்து கொள்வது நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் அது நாம் செய்யும் நல்லது. நான் தினமும் குளிப்பேன் அனால் பல் தேய்க்க மாட்டேன் என்றால் அது தவறு. நான் என் துவைத்த துணையாய் மட்டும் தன அணிவேன் அனால் சாக்ஸ் மட்டும் வரம் ஒரு முறை தன துவைப்பேன் என்பது மிக தவறு. அதே போல் காது குடையும் மொட்டுகள் (இயர் பட்ஸ்) மற்றும் நாக்கு வழிக்கும் முறை மிக தவறானது. நமது உடம்பில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்யும் பொறுப்பு இயற்கைக்கு உள்ளது. காது குடையவிட்டாலும் நமது காதுகள் சுத்தமாக தன இருக்கும். அதே போல் ருசி மொட்டுக்கள் நமது நாக்கில் உள்ளன மிக மிக மிருதுவான பகுதி அதை இரும்பை வைத்து வழிக்கிறேன் என்று சொல்லி அதை புண்னக்குவதன் மூலமாக கால போக்கில் அவைகள் செயல் இழந்துவிடும்.இதில் ஆதாரமே புரிந்து கொள்ளுதல் தான். எதற்காக செயல் செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். உங்கள் வீட்டை முடிந்த அளவு சுத்தமாக நேர்த்தியாகவும் வையுங்கள். அது உங்களுக்கு ஒரு இனிமையான சூழ்நிலையை கொடுக்கும். நீங்கள் சுத்தம் செய்ய அடுத்தவர்களை எதிர்பார்ப்பது தவறு அடுத்தவர்களை சொல்வதற்குள் நீங்களே உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். எல்லாம் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன சுத்தம் செய்யும் வேலைகள். சுத்தமாக இல்லை என்றால் நீங்களும் ஒரு கரணம் என்று எண்ணுங்கள், உங்களை நீங்களே திட்டி கொள்ளுங்கள் முதலில் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு முறை நீங்கள் இதை செய்து தான் பாருங்களேன், புரியும் அப்போது.
இப்போது வீட்டில் இருந்து வெளியில் வாருங்கள் எப்படியும் ஒரு சிறு இடம் இருக்கும் அதில் குப்பைகளும் அழுக்குகளும் இருக்கும் முக்கியமாக பிளாஸ்டிக் இருக்கும். தினம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுங்கள். சுத்தமாகும். வீதியை பாருங்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் இது பற்றி 2 நிமிடம் மட்டும் பேசுங்கள் உங்கள் தெரு சுத்தமாகும். நாட்டிலுள்ள அத்தனை தெருக்களும் சுத்தமானால் நாட்டை சுத்தமாக்கியது நீங்கள் தானே. மற்றம் என்றுமே நீங்களாக இருங்கள்.அய்யா எல்லாம் சுத்தமாகி விட்டது அனால் இன்னும் மனா சுத்தம் நீங்கள் சொல்லவில்லை. சொல்லிவிட்டேனே. உங்கள் உடம்பில் ஆரம்பித்து, உடை,வீடு, சுற்று புறம், தெரு நாடு என்று உங்கள் மனது எப்போது பறந்து விரிய ஆரம்பித்ததோ அப்போதே அது சுத்தமாகிவிடும், அதற்கென்று தனியாக மன சுத்தி தேவை இல்லை.
சுத்தம் என்பது எவ்வளவு முக்கியமானதென்று பார்ப்போம். இந்த ஒரு ஒழுக்கம் மட்டும் தவணை முறையில் கையாளப்பனவேண்டும். ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்துவிட்டு விடுவது தவறு. தினமும் மிக சிறிது நேரம் செய்தல் அது ஒரு வேலையாகவே இறுக்காது, அதை விடுத்தது சேர்த்து வைத்து செய்யும்போது அது ஒரு நாளை செலவு செய்து விடும்(நேரம் மிக மதிப்புள்ளது அதனால் தான் அதை பணத்தை போல் செலவு என்கிறோம்). இதற்க்கு சிறிய அடிப்படை உள்ளது, எடுத்த பொருளை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டால் போதும் பாதி சுத்தம் செய்வதற்கான நேர மிச்சம். ஒரு வரம் முழுவதும் நீங்கள் உன்ன கூடாது சேர்த்து வைத்து ஒருநாள் முழுதுமாக உண்னுங்கள் என்றால் உங்களால் முடியுமா, முடியாதல்லவா அது போல் தான், தினம் தினம், தேவை படும் பட்சத்தில் வேளை க்கு சுத்தம் செய்தல் நல்லது தான். மேலும் சோம்பேறித்தனமும், வேலையை தள்ளி போடும் கேட்ட வழக்கமாகும் வழக்கமாகும். உங்கள் உடம்பை மட்டும் சுத்தமாக வைத்தால் போதும் மற்றவைகள் அவசியமில்லை என்று என்பது தவறு. இந்த ஒழுக்கத்தில் வெளியில் சுத்தம் பிரதானமாகும், அந்த வெளிசுத்தம் உள்ளே பிரதி பலிக்க வேண்டும், மனது விரிதலின் மூலம். உங்கள் அந்தக்கரணங்கள் எம கண்டிப்புடன் பின்பற்றுவதம் மூலமாகவும் சுத்தமாகும், என்பதை உங்களால் உணர புரிந்து கொள்ள முடியும்.
ஒரு முக்கியமாக சொல்ல வேண்டியதை தவறவிட்டு விட்டேன், நம்மவர்கள் எப்போதும் செய்வது, பொது இடங்களில் உபயோகப்படுத்தப்படும் கழிப்பறைகளோ எந்த இடமாக இருந்தாலும், ஒரு முறை தானே உபயோக படுத்த போகிறோம் என்ற உதாசீனமாக, சுத்தம் செய்வது. கிடையாது நமது சமூக பொறுப்பு உள்ளது. அதே போல் காய் கழுவும் விதத்தில் உள்ள டிஸ்யூ காகித்தை எடுத்துக்கொண்டே இருப்பது, தோட்டத்தில் மலைகளை அவசியம் இல்லாமல் பறித்து கீழேபோடுவது, இது போல் பல உள்ளன. இது தானே, இது நம்முடையது இல்லையே என்பது எல்லாமே தவறு, இவை அனைத்தும் சௌசா என்கிற சுத்தம் ஒழுக்கத்தில் அடங்கும்.
தேக சுத்தி, மனசுத்தி, புத்தி சுத்தி மேலும் நாடி சுத்தி.
சுத்தம் கடவுள் தன்மை வாய்ந்தது, சுத்தம் கடவுளுக்கு அடுத்தது என்பது எல்லாம் பேச்சு வழக்கில் உள்ளவைகள், முக்கியத்துவம் சுத்தத்திற்கு உண்டு, இது எந்த சுத்தம் என்றால் இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். யோக முறைப்படி, இதயம் என்பது நமது உடம்பில் துடிக்கும் இதயம் அல்ல. சூக்ஷ்ம இதயம் அதாவது நமது வெளியில் இருந்து கண்களுக்கு புலப்படும் இந்திரியங்கள் -5, புலப்படும் அனால் அவைகள் ஞான வேலை பார்ப்பவை அவைகள் - 5, ப்ராணன்கள் - 5, மனம், புத்தி, அஹங்காரம், கடைசியாக சித்தம். இந்த 19 காரணிகளும் இதயம் என்று எடுத்துக்கொள்ளப்படும். இவைகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். ப்ராணன்கள் பிராணாயாமத்தின் மூலமாக சுத்தம் செய்யப்படலாம். தாத்ரகா போன்ற பயிற்சிகள் உண்டு.
இங்கே முக்கியமாக த்ரி கரணம் பெரும் பங்கு என்று சொல்லவேண்டும். எண்ணமும்,எண்ணப்படுவதும் சுத்தமாக இருக்கவேண்டும். அதுவே உங்கள் பேச்சிலும் வெளிப்படவேண்டும், அப்படியே செயலும், வாக்கு சுத்தம் என்று சொல்லுவார்கள். உங்கள் பேச்சு எண்ணத்தின் அடிப்படையிலே தன இருக்கும், உங்கள் ஐம்புலன் களும் உங்கள் எண்ணத்தை தன ப்ரதிபலிக்கும், உங்கள் மூளை வெறும் தகவல் சேமிக்கும் கருவி மட்டுமே. மனமும் அகங்காரமும் தான், அனைத்தையும் முடிவு செய்யும் மூல ஆதாரமாக உள்ளது. அவை சாத்வீகமாக இருந்தால் மட்டுமே நல்லொழுக்கம் என்பது சாத்தியம்.
ஒரு கெட்ட எண்ணம் கொண்டவர் போதும், ஒரு பெரிய ஒற்றுமையான கூட்டத்தையே கலைத்துவிடுவார், இங்கே சொல்வதை மாற்றி அங்கே சொல்வது, என்பது போன்ற புறம் கூறி அனைத்தையும் சுத்தமில்லாத எண்ணம் வார்த்தை ஆகி அதுவே செயல்படுத்த பட்டு அனைத்தும் பாழாகிவிடும்.

Stay
Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through
Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#sranaguru #guru #sranayoga #yogi #rajayoga #hathayoga #chakras #kriya #mind #body #soul #meditation #karma #Reiki #KUNDALINI #THAPAS #AHIMSA
#SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE
#YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya
#Viveka #vidhya
No comments:
Post a Comment