Wednesday, 12 July 2017

Bhrahmacharya Tamil Day – 4

Bhrahmacharya Tamil Day – 4

இன்றைய வகுப்பு மூன்றாவது ஒழுக்கம்: பிரம்மச்சரியம். பிரம்மச்சாரி இன் அர்த்தம் பிரமத்தை நோக்கி நடப்பது, ப்ரஹ்ம என்பது சுயம்

இது தான் அனைத்து நல்லொழுக்கங்களிலும் பிரதானமானது, தேடுபவரால் முறையாக மிக கண்டிப்புடன் பின்பற்றவேண்டியது. அனைத்து  குருக்களாலும் மிக கண்டிப்புடன் கற்றுத்தரப்படுவது தன இது. மாணவனாக,கணவனாக அல்லது மனைவியாக, அப்பாவாக அல்லது அம்மாவாக, சந்நியாசியாக இது போன்று எல்லா நிலைகளுக்கும் உண்டான வரைமுறைப்படி, ஆழமான நம்பிக்கையுடன் பின்பற்றும் பட்சத்தில் தான் பிற நல்லொழுக்கங்களும் நம்முடன் இருந்து, நமது யோக பாதையில் செல்ல முடியும்
ப்ரஹ்மச்சாரியம் என்பது மாணவன் பள்ளியில் சேரும்போது கற்றுக்கொடுக்கப்படும் சுய கட்டுப்பாடு படம் ஆகும். தனிமையில்,பொதுவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், எவ்வளவு,எப்படி உண்ண  வேண்டும், அடுத்தவர் கூசும்படி நடந்து கொள்ளாமல் இருப்பது எப்படி. தன்னுடைய கற்பை எப்படி மிதப்படுத்தி, அதை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது போன்ற நெறி முறைகள் சொல்லிக்கொடுக்கப்படும். எவற்றை கட்டுப்படுத்தவேண்டும், எவற்றை அடக்கவேண்டும் என்பது மிக முக்கியமானவை. அதே மாணவன் படித்து அவன் திருமணத்திற்கு பின் தன சுய ஒழுக்கத்தை பேணிக்காப்பது எப்படி என்பதை உணர்ந்து கொள்வான். கட்டுக்கடங்காத புலன்களின் அடிமையாவது இந்த ஒழுக்கம் இல்லாமையே

இந்த ப்ரஹ்மச்சாரியத்தின் குறிக்கோளே, மனித சக்தியை சேமிப்பதும், மிக தவறான வழிகளில் செலவழிக்காமல் இருப்பதுவே
ப்ரஹ்மச்சாரியத்தை காப்பதன் மூலம் மற்றும் பிராணாயாமத்தின் மூலம் மிக பெரிய தூரத்திற்கு செல்ல முடியும். அனைத்து வேதங்களின் உட்கருத்து இது தான். தன்னை உணர்தலின், மனதின் துணையுடன் நமக்குள் நாமே செல்லும் பிரயாணத்தை இந்த ஒழுக்கம் தான் நிர்ணயிக்கிறது. பாலின உணர்வுகள் மிக மிதமாக கட்டுப்படுத்தவேண்டும். கண்டிப்புடன் கட்டுப்படுத்தவேண்டுமே தவிர அவற்றை அடக்குதல் பாதுகாப்பான ஒன்று அல்ல. ஓஜாஸ் என்னும் சக்தி பிரவாகம் நமக்குள் கொண்டுவரும் இந்த ஒழுக்கம். மனித உடம்பே ஒரு ஜெனெரேட்டர் போன்ற மின்சக்தி கிடைக்கும். அதன் மூலமே தேடுபவர் அடுத்த நிலை அடைவர்
முக்கியமாக ப்ரஹ்மச்சாரியத்தில் பார்க்கவேண்டியது என்னவென்றால், மீண்டும் இதுவும் த்ரி கரண வுடன் ஒத்து போக வேண்டும். எண்ணம், பேச்சு மற்றும் செயல் மூன்றிலும் எந்த ஒரு சிறிய வேறுபாடும் இருக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் கிடைக்காத பொருளுக்கான ஏக்கம் திருட்டு முடிவு துன்பமும் அது சிலசமயங்களில் துயரத்தையும் கொண்டு வரலாம். அதனால் இவ்வொழுக்கத்தை மீறவேண்டும் என்ற எண்ணம் கூட உங்களை செய்துவிடும்
ஏதனால் இந்த ஒழுக்க குறைபாடு வருகிறது? இன்றியங்களினால் ஒருவர் ஆளப்படும் போது, அவர் முழுவதுமாக மனது மற்றும் புலன் களின் கட்டளை படி நடக்கிறார். மனதின் கடிவாளத்தை அவரால் பிடித்து நிறுத்த முடியவில்லை, மனமும் புலன்களும் சிற்றின்பத்தை நாடி அதன் பால் ஓடுகின்றன. அப்படி இருக்கும் ஒருவர் தன்னால் இதிலிருந்து விடுபட முடியும் என்பதை எண்ணி  முடியாது. அதனால் அவரே நினைத்தாலும் மூழிகியதிலிருந்து வெளி வர முடிவதில்லை, கடைசியில் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்
இதிலிருந்து இவரு வெளி வருவது?
மனதில் அவர் ஆணித்தரமாக நம்பவேண்டும், என்னால் எளிதாக வெளிவர முடியும் என்று.
மனதிற்கு புரியவைக்க முயற்சிக்க வேண்டும் இது நமது வாழ்க்கைக்கான அர்த்தம் இல்லை என்று.
இது சிற்றின்பம் வாழ்க்கையில் சிந்திக்கவேண்டிய நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன என்று மனதுக்கு சொல்ல வேண்டும்.
இது அனைத்தும் நடக்காவிட்டால், இடம் மாற்றி ஓடிவிடுங்கள்.
கடைசியாக, உயர்ந்த பிரக்ஞை மேல் நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டு, அதனுடன் சேர்ந்தால் மட்டுமே வழக்கை மீட்க முடியும்


Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya 


No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil