Monday, 31 July 2017
Friday, 28 July 2017
நியம - ஈஸ்வர ப்ரணிதான் (ஈஸ்வர சரணடைதல்)
இன்றய வகுப்பு -
10
நியம - ஈஸ்வர ப்ரணிதான் (ஈஸ்வர சரணடைதல்)
இது மிக முக்கியமான நியம, சென்ற வகுப்புகளில் ஈஸ்வர் பற்றி சிறிது பார்த்திருந்தோம். நீங்கள் யாரும் உங்கள் ஈஸ்வரரை தயார் செய்து இருக்க மாட்டீர்கள் என்று தெரியும். சரணாகதி என்ன, எப்படி செய்யவேண்டும். அது எவ்வாறு ஏற்படும். இரண்டு முக்கியமான அங்கங்களை கொண்டது
பற்றில்லாமையே ஈஸ்வர அர்ப்பணம் ஆகும்.
இயற்கையின்(ஈஸ்வரன்) விருப்பத்தை ஏற்று கொள்ளுதல்.
இது மிகவும் அதிக உயரத்தில் இருக்கும் பயிற்சி ஆகும். இது நாம் இதற்க்கு முன்னர் பார்த்த 9 ஒழுக்கங்களும் முறையை நேர்த்தியாக தொடர்ந்து பயிற்சி செய்யும்பட்சத்தில் தான் இந்த ஒழுக்கத்தினை உணர முடியும். எப்படி நாம் இயற்கையின் எண்ணத்தை உணர முடியும், பார்த்தல், கேட்டல் மூலமாக இயற்கையை அறிய முடியுமா? அதற்கு நிறைய பயிற்சிகள் வேண்டும், அப்போது தான், ஈஸ்வர் கொடுக்கும் சிறு செய்திகள், எண்ணங்கள், விருப்பங்களை உணர இயலும். நான் ESP எனப்படும் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு அதை குறிப்பிடவில்லை.

உலகத்தில் பற்றின்மை, வாழ்வில் பற்றின்மை தான் குறிக்கோள் அனால் அது உடனடியாக நடக்காது அதனால், குரு மார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நமக்கு மிக பிடித்த விஷயங்களை பற்றற்று இருங்கள் அல்லது குறைவாக நுகருங்கள். உங்களுக்கு புலன் இன்பம் தரக்கூடிய விஷயங்களில் பற்றை குறையுங்கள் பிறகு நிறுத்துங்கள். நீங்கள் செய்யும் கடமைகளுக்கான பலனை எதிர்பார்க்காமல் செய்யுங்கள். மேசையின் மீது 5 மசாலா தோசை இருந்தால் தேவைக்கு ஒன்றோ இரண்டோ தான் எடுக்க வேண்டும், 5 உடை பிறந்த தினத்துக்கு வாங்க திட்ட மிட்டிருந்தால் 2 வாங்குங்கள். உங்கள் கடமையை செய்து அதன் பலனை அற்பணியுங்கள், நீங்களாக ஏதும் முடிவுகளை தீர்மானம் செய்யாதீர்கள், உங்கள் கடமைக்கு ஏற்ற பதில் கிடைக்கும், கிடைக்க போகும் பலனை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
இங்க பதஞ்சலி மகாராஜ் தனது சூத்திரத்தில் ஈஸ்வர் என்பது, யோகத்தை ஊக்குவிக்கும், முறை படுத்தும் காரணியாகவும், மாற்றத்திற்கு அழைத்து செல்லும் உந்து சக்தியாகவும் உருவாக படுத்தி உள்ளார். யோகத்தின் பாதை முழுவதும் பயிற்சி பயிற்சி தொடர்ந்த இடைவிடாத பயிற்சி, வெகுகாலம் செய்தால் தான் அதன் பலன் களை தேடுபவர் உணர முடியும். "தீர்க கால நைரந்தரிய சர்கால சேவிதோ த்ருட பூமி" இடைவெளி இல்லாத தொடந்த பயிற்சிகள், ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தான் அமைதியின் மூலம் உடைக்க முடியும். அப்போது இந்த ஈஸ்வர் அர்பணித்தல் மெதுவாக சில நேரங்கள் என்று ஆரம்பித்து உங்கள் முழு வாழ்க்கையையும் ஊடுருவி இரண்டற கலந்து விடும். தற்போது நீங்கள் உடம்பு, மனம், அறிவு, உங்கள் நுட்பமான அமைப்பாகிய யோகா அமைப்பு அனைத்தும் இப்போது தனி தனியே இருக்கும். ஒரு கட்டத்தில் அனைத்தும் ஒன்றாகி கலந்து இனைந்து யோக பரிணாமம் அடையும்போது நீங்களே உணரலாம் "ஈஸ்வர ப்ரணிதானாம் த்வா"
நான் இருக்கிறேன், இரு என்பதின் தன்மை ஒருமை நிலை, இதில் நான் என்ற ஒருமை மறைய வேண்டும் தன்மை மட்டும் இருக்க வேண்டும்.
கெளதம புத்தரிடம் ஒருவர் வந்து கேட்டார் நான் மிகவும் கஷ்ட படுகிறேன் என்ன இதற்க்கு வழி என்றார், அப்போது புத்தர், நான் ஐ, விடு, துற, கஷ்டம் போகும் என்றார். இதை எவ்வாறு விடுவது அல்லது துறப்பது, அதற்க்கு ஒரு முக்கியமான வழி தான் இந்த ஈஸ்வர அர்ப்பணம், உங்களுடைய அகங்காரத்தை விடுங்கள் உங்கள் துன்பங்கள் உங்களைவிட்டு போகும். இந்த கார் என்னுடையது, இந்த வீடு என்னுடையது, இவன் என் மகன், சொந்தம் கொண்டாடுதல் தான் பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. உண்மையாக சொன்னால் நம்மால் எதையும் சொந்தமாக்க முடியாது, சொந்தம் என்பது சில நேரங்கள், சிலகாலங்கள் மட்டுமே. பிறகு அதுவும் கடந்து போகும், திரும்பவும் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே எல்லாம் வந்து விடும்.
பகவத் புராணத்தில் 9 நிலைகள் உள்ளன, அதில் கடைசியில் இதே ஆத்மநிவேதனம் புனிதமான உன்னை உன் ஆத்மாவை நிவேதனமாக தியாகம் செய்யவேண்டும் என்று சொல்ல பட்டிருக்கும். அவ்வாறு உங்கள் உடம்பு, மனம், அறிவு, கடைசியாக உங்கள் ஆன்ம ஈஸ்வரனுக்கு அர்பணிப்பதன் மூலமாக, உங்கள் அகந்தை அகன்று சூரியனை போல் பிரகாசமடைவீர்கள் என்பது தான் அது. எல்லாமே சிறிது காலம் மட்டுமே, கால அவகாசத்தில் வேண்டுமானால் சிறிய மாற்றங்கள் இருக்கலாமே தவிர, இந்த அண்ட சராசரத்தில் யாரும் ஏதையும் நிரந்தர சொந்தமாக்க முடியாது. எல்லாம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து மீண்டும் சக்கரம் சுற்ற ஆரம்பிக்கும்.
நிபந்தனையற்ற சரணாகதி, அர்பணமும் தான் ஈஸ்வர் நம்மை வழிநடத்தி, நமக்கு பயிற்சிக்கான ஊக்கமும் திறனும் தந்து யோகத்தின் எல்லா நிலைகளையும் அடைய செய்வர்.

இது தன சரியான தருணம் காரணமும் விளைவும் என்ற கோட்பாடை பார்ப்போம், அதில் நமது ஈஸ்வரரை ஒப்பிட்டு பார்ப்போம்.
காரணம் இல்லாமல் விளைவு இல்லை
காரணம் பலவிதமான தோற்றங்களில் விளைவுகள் மூலமாக வெளிப்படும்
விளைவுகளில் உள்ள காரணத்தை எடுத்துவிட்டால் ஏதும் மிச்சம் இருக்காது.
இப்போது உங்கள் ஈஸ்வர் தான் காரணம் என்று வையுங்கள், அவர் பல ரூபங்களில் வெளிப்படுகிறார், அவரை நீக்கிவிட்டால் எதுவும் மிச்சம் இருக்காது, இன்னும் தெளிவாக பார்ப்போம். களிமண் தான் ஈஸ்வரர் அவர் பானை போன்ற மண்பாண்டங்கள், விளக்குகள் இன்னபிற பல வடிவங்களில் வெளிப்படுகிறார். இப்போது அனைத்து (களிமண்ணால் தயார் செய்த) பொருள்களிலும் உள்ள களிமண்ணை எடுத்து விட்டால் எதுவுமே மிஞ்சாது அல்லவே.
இன்றய வகுப்பில் கடைசி ஒழுக்கமான ஈஸ்வர் ப்ரணிதான் ஐ முடித்து விடுவோம்.
ஒருவர் மிக உயர உயர பறக்க வேண்டும் என்றால் எடையை குறைக்க வேண்டும், உடல் எடை ஒருபுறம் இருந்தாலும் நாம் நமது கைகளில் அதாவது மனதில் மிக அழுத்தமான எடையை தாங்கி வைத்துகிண்டிருக்கிறோம். இந்த எடை மிகுந்த மனமானது கீழ் நோக்கி இழுக்கப்படுகிறது. அதனால் உங்களால் மேல மேலே செல்ல முடியாது. உங்கள் மனம் முழுவதும் பல நூறு கார்கள், வீடுகள், விலை மதிக்க முடியாது நகைகள், இன்னும் ஆடம்பர வாழ்க்கைக்கு, நமது புலன் இன்பத்திற்கான பல பொருட்கள் நம் மனதில் கனத்தை அதிகரித்து கொண்டே இருக்கும், பிறகு எவ்வாறு உயர எழும்ப முடியும். உங்கள் ஆசைக்கு முடிவில்லை, தீர்வு இல்லை அதனால் அவை உங்களை பறக்க அனுமதிக்காது. அதனால் மனம் காலியாக ஒரு ஆதாரம் தேவை படுகிறது, அதை தான் அர்ப்பணிப்பு என்கிறோம். எவர் ஒருவருக்கு தான் மனம் மிக பாரமாக இருக்கிறதோ, ஏதாவது ஒரு இடம் சென்று அவர் புலம்பி தன் மனதை இறக்கி வைப்பர். அதை நாம் இங்கே செய்ய தேவை இல்லை, நமக்கு நமது பாரம் இறக்க தேவை இல்லை மொத்தமாக எல்லாவற்றையும் அகற்றி, சுத்தமாக்கி அங்கே ஒளி விட ஒரு தூண் தேவை, அவரிடம் தான் அனைத்தையும் அர்ப்பணித்து மனதை முதலில் சுத்தம் செய்து எடை இல்லாமல் ஆக்க ஓர் ஆதாரமே இந்த ஈஸ்வர்.
கடைசியாக ஒரு ஈஸ்வர் கு ஒரு விளக்கம், செல்லுலார் தொலைபேசிகள் சேவை வழங்குநர் என்பது போல் வைத்து கொள்ளலாம். அனைத்து ஜீவராசிகளும் சிம் அட்டை என்று வைத்து கொள்ளலாம், அதே போல் அனைத்து சிம் அட்டைகளும் ஒன்றுடன் ஒன்று இணைத்து, அவை அனைத்தும் ஒரு ஒரு சேவை வழங்குநர் போல் உள்ள ஈஸ்வர் ன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ஒரு கை பேசி இறந்துவிட்டால், அதாவது உடைந்துவிட்டால் வேறு புதிய கைபேசியில் இந்த சிம் அட்டையை உள்ளிடுவது போல் வாழ்க்கை, சிம் அட்டை போல் உள்ள ஆத்மா விற்கு பழைய நினைவுகள் சேமிக்கப்பட்டு சித்தத்தில் மறைத்து வைக்க பட்டிருக்கும். சிம் அட்டை பழுது அடைந்தாலும் புதிய சிம் அட்டையில் அதே என்னை திரும்ப உள்ளிட முடியும். அந்த சேவை வழங்குபவர் தான் ஈஸ்வர், உயிரினங்கள் அனைத்தும் இந்த சிம் அட்டையை போன்றதே. இதை தான் வேதங்களில் ஈஸ்வர் மற்றும் இந்த அண்டத்தின் செயல் பாடு என்று குறிப்பிட பட்டுள்ளது.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through
Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#sranaguru #guru #sranayoga #yogi #rajayoga #hathayoga #chakras #kriya #mind #body #soul #meditation #karma #Reiki #KUNDALINI #THAPAS #AHIMSA
#SATHYAM
#DESIRE
#EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana
#Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya
Subscribe to:
Posts (Atom)
Review to Review
Review to Review #sampathyogi #sranayoga #teacher #yoga #yogi #body #mind #intellect #soul #ego #tamil
-
இன்றய வகுப்பு - 8 நியம - தபஸ் ( சகிப்பு தன்மை ) நேரிடையான அர்த்தம் சகிப்பு தன்மை தான் . இந்த ஒழுக்கம் இருந்தால் மட்ட...
-
Astheya Day – 3 இன்றய ஒழுக்கத்தின் தலைப்பு " அஸ்தேய " திருடாமை . உடனே நீங்கள் எண்ணுவீர்கள் நான் என்று திருடினேன் ...
-
#sranayoga #yoga #breathing #exercise #oxygen #immune #energy #body #health #control #pranayama #nadi #universal #lifeforce #prana Little...